அப்படியே புடிச்சு மேல வாங்க சார்...! 'வெள்ளத்தில் சிக்கி தவித்த அமைச்சர்...' 'பதறிப்போன மக்கள்...' - உச்சக்கட்ட பரபரப்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்க்க சென்ற உள்துறை அமைச்சர் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

அப்படியே புடிச்சு மேல வாங்க சார்...! 'வெள்ளத்தில் சிக்கி தவித்த அமைச்சர்...' 'பதறிப்போன மக்கள்...' - உச்சக்கட்ட பரபரப்பு...!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழைக் காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது  தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தாதியா மாவட்டத்தில் 2 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

Madhya Pradesh Minister rescued flood Air Force helicopter

அம்மாநிலத்தின் சிவ்புரி, ஷியோப்பூர், குவாலியர் மற்றும் தாதியா போன்ற பகுதிகளில் சுமார் 1,800-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. அப்பகுதியில் இருந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Madhya Pradesh Minister rescued flood Air Force helicopter

மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அமைச்சரும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார். அதோடு, மத்திய பிரதேசத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்