IKK Others
MKS Others

இப்படியே தான் வாழ்க்கை முழுக்க கஷ்டப்படணுமா...? 'உடைஞ்சு போயிருந்த நேரத்துல கெடச்ச சின்ன கல்...' - அதிர்ஷ்டம் எப்படி வரும்னு 'யாருக்கு' தெரியும்...?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேசத்தில் சுரங்க தொழிலாளி ஒருவருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வைரம் கிடைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியே தான் வாழ்க்கை முழுக்க கஷ்டப்படணுமா...? 'உடைஞ்சு போயிருந்த நேரத்துல கெடச்ச சின்ன கல்...' - அதிர்ஷ்டம் எப்படி வரும்னு 'யாருக்கு' தெரியும்...?

மத்தியப் பிரதேச மாவட்டம் பந்தேல்கண்ட் பகுதியில் இருக்கும் பிரபல உலகப் புகழ்பெற்ற பன்னா வைரச் சுரங்கத்தில் பணிபுரிந்து வருகிறார் முலாயம் சிங்.

பழங்குடியினத் தொழிலாளியான முலாயம் சிங் தன் குடும்பத்தின் அன்றாட செலவுக்கே போராடவேண்டிய நிலையில் தான் வாழ்க்கையை நடத்தி வருகிறார். சுரங்க வேலையில் வரும் ஊதியமும் அனைத்து செலவுகளையும் தீர்க்கும் வகையில் இருக்காதாம்.

பல ஆண்டுகளாக கஷ்ட்டத்தில் இருந்து வரும் முலாயம் சிங் வாழ்க்கையில் இப்போது அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டியுள்ளத்து. ஆம், முலாயம் சிங் சுரங்க வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு 13 காரட் வைரம் கிடைத்துள்ளது. இந்த வைரத்தை ஏலம் விட்டால் லட்சகணக்கில் விலை போகும் எனவும் கூறவப்படுகிறது.

முலாயம் சிங்கிற்கு கிடைத்த வைரம் குறித்து வைர ஆய்வாளர் அனுபம் சிங் கூறும் போது, 'முலாயம் சிங் கண்டுபிடித்த விலைமதிப்பற்ற கல் கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில் உள்ள ஆழமற்ற சுரங்கங்களில் இருந்து கிடைத்துள்ளது.

இந்த வைரத்தின் எடை 13.54 காரட். அதன் மதிப்பு குறைந்தது ரூ.60 லட்சமாவது இருக்கும். அதோடு பன்னா வைரச் சுரங்கத்திலிருந்து வெவ்வேறு எடையுள்ள ஆறு வைரங்களையும் மற்ற தொழிலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதிர்ஷ்ட தேவதை முலாயம் சிங்கை மட்டுமல்ல மற்ற தொழிலாளர்களின் வாழ்க்கையிலும் வெளிச்சத்தை கொடுத்துள்ளாள் என்றுதான் சொல்லவேண்டும். 

இந்த ஆறு வைரங்களில் இரண்டு முறையே 6 காரட் மற்றும் 4 காரட் எடையும், மற்றவை முறையே 43, 37 மற்றும் 74 சென்ட் எடையும் கொண்டவை. கிடைத்த வைரங்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியைத் தாண்டும்' எனக் குறிப்பிடுள்ளார்.

இதுகுறித்து கூறிய முலாயம் சிங், 'பல வருடங்கள் நான் சுரங்கத்தில் வேலை செய்து வருகிறேன். இப்போது தான் எனக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. எனக்கு கிடைத்த இந்த வைரத்தை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை எனது குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவேன்' எனக் கூறியுள்ளார்.

MADHYA PRADESH, MP, DIAMOND, RS 60 LAKH

மற்ற செய்திகள்