இவர அடையாளம் தெரியலையா?.. எப்படி எல்லாம் காசு பணத்தோட வாழ்ந்திருக்க வேண்டிய மனுஷன்... இத்தன வருஷமா platformல... யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் புகழ் பெற்ற தொழில்நுட்ப கல்லூரியான ஐஐடி (IIT)-யில் படித்த இன்ஜினியர் நடுரோட்டில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இவர அடையாளம் தெரியலையா?.. எப்படி எல்லாம் காசு பணத்தோட வாழ்ந்திருக்க வேண்டிய மனுஷன்... இத்தன வருஷமா platformல... யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு தெருவோரம் முதியவர் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஆஷ்ரம் ஸ்வராக் சதன் அமைப்பைச் சேர்ந்த ஒரு நபர், எதர்ச்சியாக பேசியுள்ளார்.

அதற்கு 90 வயது நிரம்பிய அந்த முதியவர் மிக சரளமாக ஆங்கிலத்தில் பதிலளித்துள்ளார். அதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த அந்த நபர், அவரிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்து, அவரது பின்னணியை கேட்டறிந்தார்.

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அந்த முதியவரின் பெயர் சுரேந்திர வஷிஷ்த். கடந்த 1969 ஆம் ஆண்டு, ஐஐடி கான்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து, அதன் பின் 1972 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் எல்எல்எம்(LLM) படித்துள்ளார்.

இவரது தந்தை ஒரு தனியார் மில்லில் சப்ளையராக பணிபுரிந்தவர். மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து, இந்தியாவின் மிகச்சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐஐடி-யில் பயின்று, ஏன் இப்படி ஒரு நிலைக்கு வந்தார் என்பது இன்னும் சரிவர அறியமுடியவில்லை.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்