'மனைவிக்கு உடம்பு சரி இல்ல...' 'வீடு, கார் எல்லாத்தையும் என்னவா மாத்திருக்கார் பாருங்க...' - நெஞ்சை உருக வைக்கும் அன்யோன்யம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப்பிரதேசத்தில் 74 வயதான முதியவர் ஒருவர் தன் மனைவியின் உடல்நலத்தை பராமரிக்க வீட்டையே அவசரச் சிகிச்சை பிரிவாக மாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.
மத்தியப்பிரதேசம் ஜபல்பூர் பகுதியில் வசிப்பவர் 74 வயது கியான் பிரகாஷ். ஓய்வுபெற்ற பொறியாளரான இவர் தன் மனைவி குமுதானி ஸ்ரீவஸ்தவா, அவர்களுடன் வசித்து வருகிறார்.
ஆஸ்துமா நோயால் பதிப்படைத்துள்ள தன் மனைவி குமுதானி ஸ்ரீவஸ்தவாவிற்காக பிரகாஷ் தங்களின் வீட்டையே ஒரு அவசர சிகிச்சை வார்டாக மாற்றியுள்ளார்.
ஒரு மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் இருக்கும் அனைத்து வசதிகளையும் அதாவது உறிஞ்சும் இயந்திரம், நெபுலைசர், காற்று சுத்திகரிப்பான் மற்றும் வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவச் சிகிச்சைக்குப் பயன்படும் கருவிகள் அனைத்தையும் தன் காதல் மனைவிக்காக பிரகாஷ் தன் வீட்டிலேயே அமைத்துள்ளார். மேலும் தன் மனைவியுடனே ஒவ்வொரு நொடியையும் கழித்து வருகிறார்.
இதுகுறித்து கூறிய அப்பகுதி மக்கள், கடந்த 4 ஆண்டுகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குமுதானி தற்போது வீட்டிலேயே பிரகாஷ் உருவாக்கியுள்ள ஐசியூவில் தான் சிகிச்சை பெற்று வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ் அவரது காரை கூட ஆம்புலன்சாக மாற்றிவிட்டார்.
அவர்களின் அன்பையும், காதலையும் கண்டு நாங்கள் வியக்கிறோம். மேலும் அவரது மனைவி நலம் பெறவேண்டி எங்கள் சுற்றுவட்டார மக்களும் பிராத்தித்து வருகிறோம் எனக்கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்