90s கிட்ஸ்-னா சும்மாவா..?..கல்யாணத்துக்கு புல்டோஸரில் வந்த எஞ்சினியர் மாப்பிள்ளை.. வியந்துபோன மணப்பெண்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் கல்யாண மாப்பிள்ளை ஒருவர் திருமண ஊர்வலத்தில் புல்டோசரில் வந்து இறங்கிய சம்பவம் அந்த பகுதி மக்களை வியப்பில் ஆழத்தியுள்ளது.
Also Read | திருமணத்தில் முடிந்த 2 வருட காதல்.. அடுத்த 45 நாளுல அரங்கேறிய ட்விஸ்ட்.. மாப்பிள்ளை வீட்டில் பரபரப்பு
திருமணங்களில் மாப்பிளை ஊர்வலம் பொதுவாக கார்களில் அல்லது குதிரைகளில் நடைபெறும். சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் சூழ மாப்பிள்ளையை அலங்கரிக்கப்பட்ட கார்களில் திருமணம் நடைபெற இருக்கும் இடத்துக்கு அழைத்து வருவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், மத்திய பிரதேசத்தில் புல்டோஸரில் மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்றிருக்கிறது. இது மணப்பெண் உள்ளிட்ட அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறது.
திருமணம்
மத்தியப் பிரதேசத்தின் பெதுல் நகராட்சியை சேர்ந்தவர் அங்குஷ் ஜெய்ஷ்வால். இவர் சிவில் எஞ்சினியரிங் படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. திருமண வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் தனது குடும்பத்தாரிடம் தனது ஆசையை சொல்லியிருக்கிறார் அங்குஷ். இதனால் அவரது குடும்பத்தினர் ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்தாலும் பின்னர் அவரது ஆசைக்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.
மாப்பிள்ளை ஊர்வலத்தில் புல்டோஸரில் பயணிக்க வேண்டும் என ஆசை தெரிவித்திருக்கிறார் அங்குஷ். பெற்றோர்கள் அங்குஷ்-ன் ஆசைக்கு ஓகே சொல்லவே, தனது ஊர்வலத்தில் ஊரையே திகைக்க வைத்திருக்கிறார்.
ஆசை
அங்குஷ் பணிபுரியும் நிறுவனம் புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களை தயாரித்து வருகிறது. இதனால் தனது ஊர்வலத்திலும் புல்டோசரை பயன்படுத்தியிருக்கிறார் அங்குஷ். இதுகுறித்து அவர் பேசுகையில்,"எனக்கு சிறிய வயதில் இருந்தே புல்டோசர் மீது ஆசை இருந்தது. எனது பணியிடத்திலும் நான் தினந்தோறும் புல்டோசர் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை பார்த்து வருகிறேன். இதனாலேயே இந்த ஏற்பாட்டை செய்தேன்" என்றார்.
திருமணத்தின் போது, அலங்கரிக்கப்பட்ட புல்டோஸரில் அங்குஷ் தனது நண்பர்களுடன் அமர்ந்து வர, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அந்த நிகழ்வை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனிடையே இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்