'இனிமேல் கவர்மெண்ட் ஆபிசில்...' 'மாட்டு சிறுநீர் பினாயில் தான் யூஸ் பண்ணனும்...' - மத்தியப் பிரதேச அரசு உத்தரவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅரசு அலுவலகங்களில் இனி மாடுகளின் சிறுநீர் மூலம் தயாரிக்கப்படும் பினாயிலை பயன்படுத்த வேண்டும் என மத்தியப் பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் ஜனவரி 31ஆம் தேதியன்று மத்திய பிரதேச பொது நிர்வாகத் துறை, இனி அனைத்து விதமான அரசு அலுவலகங்களிலும் வேதியியல் முறையிலான பினாயிலுக்குப் பதிலாக மாட்டுச் சிறுநீர் மூலம் தயாரிக்கப்பட்ட பினாயிலை பயன்படுத்தியே வளாகங்களை சுத்தப்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த உத்தரவை பிறப்பித்த பொது நிர்வாகத் துறைச் செயலாளர் நிவாஸ் சர்மா, மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களை பாதுகாப்பதற்காக நாட்டிலேயே முதல்முறையாக பசு அமைச்சரவை என தனியாக ஒன்று உருவாக்கப்பட்டுதுள்ளதாகவும், கடந்த நவம்பர் மாதம் நடந்த முதல் பசு அமைச்சரவைக் கூட்டத்தில் மாட்டு சிறுநீர் பினாயிலை பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டதுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்