'நடுரோட்டில் முட்டை வண்டியை கவிழ்த்த அதிகாரி...' 'கதறி அழுத சிறுவன்...' ஏன் இந்த அராஜகம்...? வைரலாகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேச மாநிலத்தில் தள்ளு வண்டியில் முட்டை கடை வைத்திருந்த சிறுவன் லஞ்சம் கொடுக்கவில்லை என  வண்டியை கீழே தள்ளிய மாநகராட்சி அதிகாரிகளின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

'நடுரோட்டில் முட்டை வண்டியை கவிழ்த்த அதிகாரி...' 'கதறி அழுத சிறுவன்...' ஏன் இந்த அராஜகம்...? வைரலாகும் வீடியோ...!

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல சிறு குறு வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரங்களை மீட்டு எடுப்பதில் தத்தளித்து வருகின்றனர். ஒரு சிலர் தள்ளுவண்டிகளில் நடமாடும் கடைகளை நடத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சில அதிகாரிகள் அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க செய்யும் வகையில் நடந்து கொள்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, மத்தியப் பிரதேசம் இந்தூரில் வறுமையில் வாடும் 14 வயதுச் சிறுவன் ஒருவர் தள்ளு வண்டியில் முட்டை கடை நடத்தி வந்துள்ளார். அந்த சிறுவனிடம் அப்பகுதி மாநகராட்சி அலுவலர் ஒருவர் 100 ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் சிறுவனிடம் பணம் இல்லாததால், லஞ்சம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த அதிகாரி சிறுவன் வைத்திருந்த முட்டை தள்ளுவண்டியை புரட்டிக் கவிழ்த்து விட்டார். இதனால் அதில் இருந்த நூற்றுக்கணக்கான முட்டைகள் கீழே விழுந்து உடைந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் சிறுவன் மனம் பொறுக்காமல் கத்தி கதறும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

 

மற்ற செய்திகள்