இன்னும் படிப்பையே முடிக்கல.. அதுக்குள்ளே கூகுள் நிறுவனத்துல வேலை.. இந்தியாவுலயே ஒரு மாணவருக்கு இவ்வளவு சம்பளம் கிடைச்சது இல்லயாம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாப்பில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவருக்கு கூகுள் நிறுவனம் 64 லட்ச ரூபாய் ஊதியம் தருவதாக அறிவித்திருக்கிறது. இது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
கேம்பஸ் இண்டர்வ்யூ
பொதுவாகவே பொறியியல் கல்வி பயிலும் மாணவர்கள், இறுதி ஆண்டில் தங்களது கல்லூரியில் நடைபெறும் கேம்பஸ் இண்டர்வ்யூ-வில் தேர்ச்சி பெறவேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, உலகளாவிய மென்பொருள் நிறுவனங்களில் வேலை கிடைக்க உழைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. காரணம், நினைத்துப் பார்க்க முடியாத ஊதியம், பல்வேறு சலுகைகள் என திறமையான மாணவர்களுக்கு அள்ளி வழங்க பல முன்னணி நிறுவனங்களே தயாராக இருக்கின்றன.
அதுமட்டும் அல்லாமல், திறமையான ஊழியர்களை தக்கவைக்கவும் பெருநிறுவனங்கள் கணிசமாக அளவு ஊதியத்தை உயர்த்தி வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பயிலும் இறுதியாண்டு பொறியியல் மாணவர் ஒருவரை பணியில் அமர்த்தி உள்ளது கூகுள்.
கூகுள்
உலகின் முன்னணி நிறுவங்களுள் ஒன்றான கூகுள், ஹரே கிருஷ்ணா என்ற இறுதியாண்டு மாணவரை பணியில் அமர்த்துவதாக அறிவித்துள்ளது. அவருக்கு 64 லட்ச ரூபாய் சம்பளம் அளிக்க இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ECE பிரிவில் இறுதியாண்டு பயின்றுவரும் ஹரே கிருஷ்ணா விரைவில் பெங்களூருவில் உள்ள கூகுள் நிறுவன அலுவலகத்தில் பணியில் சேர இருக்கிறார். இந்தியாவில் மாணவர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட அதிகபட்ச சம்பளம் இதுதான்.
இதேபோல, இந்தப் பல்கலைக்கழக மாணவர் அர்ஜுன் என்பவருக்கு 63 லட்ச ரூபாய் ஊதியம் அளிக்க முன்வந்திருக்கிறது கூகுள் நிறுவனம். 2022 பேட்ஜ்-ஐ சேர்ந்த அர்ஜுன் AI/ML பிரிவில் பணிபுரிய இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இவரும் கூகுள் நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தில் விரைவில் பணியில் சேர இருக்கிறார்.
பொதுவாகவே, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களை வேலைக்கு எடுக்க, உலகின் முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்காட்டி வருகின்றன. இந்நிலையில், கூகுள் நிறுவனம் இந்திய மாணவரான ஹரே கிருஷ்ணாவிற்கு 64 லட்ச ரூபாய் ஊதியம் அளிக்க இருப்பதாக அறிவித்திருப்பது பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்