என் "உலகமே" நீ தான்... எப்போவும் 'என்கூடவே' இரு... 'க்யூட்' பேபியும், 35 வயது யானையும்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருவனந்தபுரம் ஸ்ரீகந்தேஸ்வரர் கோவிலில் பணிபுரிந்து வருபவர் மகேஷ். இவரது மனைவி பெயர் தேவிகானந்த். இந்த தம்பதியருக்கு இரண்டு வயதில் பாமா என்ற பெண் குழந்தை உள்ளது.

என் "உலகமே" நீ தான்... எப்போவும் 'என்கூடவே' இரு... 'க்யூட்' பேபியும், 35 வயது யானையும்!

இவர்களின் வீட்டில் வளர்ந்து வரும் 35 வயதான உமாதேவி என்ற யானை குடும்பத்தில் ஒருவராகவே வாழ்ந்து விளங்கி வருகிறது. கடந்த 7 வருடங்களுக்கு முன் மகேஷ் இந்த யானையை தனது வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். பாமா பிறந்து ஆறு மாதங்களே ஆன நிலையில், அந்த யானையுடன் பயமில்லாமல் பழக ஆரம்பித்து விட்டது. மகளுக்கும், யானைக்குமான பாசத்தை பார்த்து வியந்து போன தந்தை, சிறுமி யானைக்கு தேங்காய் கொடுப்பது, சிறுமியின் தலையில் யானை பாசத்துடன் கொட்டுவது போன்ற செயல்களை வீடியோ எடுத்து டிக் டாக்கில் வெளியிட்டு வந்துள்ளார்.

முன்னதாக கேரளாவில் யானை ஒன்றிற்கு அளித்த அன்னாசிப்பழத்தில் வெடியை வைத்து உணவளித்து, கர்ப்பமான அந்த யானை அன்னாசிப்பழத்தை உண்ட பின் வயதிற்குள் வெடித்து யானை உயிரிழந்த சம்பவத்தால் மனிதம் மரித்து போன நிலையிலும், மிருகங்கள் தனது அன்பை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது.

TRENDING NEWS

மற்ற செய்திகள்