'இதுவே டவுன் பேமெண்ட் மாதிரி இருக்கே'.. அபராதம் விதித்த டிராஃபிக் காவலர்கள்.. அதிர்ந்த லாரி உரிமையாளர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தானில் சாலை விதிகளை மீறியதற்காக லாரி ஓட்டுநர் ஒருவருக்கு 1 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒடிசாவில் லாரி ஓட்டுநர் ஒருவருக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்குவரத்து போலீஸார் உத்தரவிட்ட சம்பவம் பேசுபொருளாக மாறியது. அந்த அபராதத் தொகையைத் தொடர்ந்து தற்போது ராஜஸ்தானில் 1 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறினால், அதற்கான அபராதத் தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டு மிக அண்மையில் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன் அடிப்படையில் அதிக எடையைச் சுமந்து சென்றதற்கான அபராதத் தொகையை லாரி உரிமையாளர் செலுத்துமாறு போக்குவரத்து போலீஸார் விதித்தனர்.
ஆனால், அதற்கான அபராதத் தொகை அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைக்கும் வண்ணம் இருந்துள்ளது பரபரப்பை கிளப்பியது. அதிக எடையை சுமந்து சென்றதற்காக 1 லட்சமும், இதர தொகையாக 41 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தொகையை லாரி உரிமையாளர் பகவான் ராம் என்பவர் செலுத்தினார்.