கிச்சன் ஒரு நாட்டுல, ஹால் இன்னொரு நாட்டுல.. வீட்டுக்கு நடுவே செல்லும் சர்வதேச எல்லை.. இந்தியாவுல இப்படி ஒரு கிராமமா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் உள்ள ஒரே ஒரு கிராமம் மட்டும் இரட்டை குடியுரிமையை கொண்டுள்ளது. இதனாலேயே சுற்றுலாவாசிகள் பலர் இந்த கிராமத்திற்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிச்சன் ஒரு நாட்டுல, ஹால் இன்னொரு நாட்டுல.. வீட்டுக்கு நடுவே செல்லும் சர்வதேச எல்லை.. இந்தியாவுல இப்படி ஒரு கிராமமா..?

Also Read | காதலனை மறக்க மந்திரவாதியிடம் அழைத்துப்போன பெற்றோர்.. கடைசியில மகள் வச்ச டிவிஸ்ட்..!

வடகிழக்கு இந்திய மாநிலமான நாகலாந்து பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாகும். மியான்மர் எல்லையில் அமைந்துள்ள நாகலாந்து பல்வேறு பழங்குடி இன மக்களின் பூர்வீக பூமியாகவும் கருதப்படுகிறது. இங்குள்ள லாங்வா எனும் கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்திய மற்றும் மியான்மர் குடிமையை குடியுரிமையை பெற்றுள்ளனர். இந்திய மியான்மர் எல்லையில் அமைந்துள்ள இந்த கிராமத்தின் வழியே சர்வதேச எல்லைக்கோடு செல்கிறது. இருப்பினும் கிராம மக்கள் ஒற்றுமையாக இருப்பதால் எப்போதும் போல அவர்கள் சகஜமாக கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

Longwa only indian village with dual citizenship situated in Nagaland

பொதுவாக இரு நாட்டின் எல்லை என்றாலே கையில் ஆயுதங்களுடன் அதிகாரிகள் நிற்பது தான் நம்முடைய ஞாபகத்திற்கு வரும். ஆனால் இங்கு அப்படி ஏதும் கிடையாது. இந்த கிராமத்தை நிர்வகிக்கும் கிராமத் தலைவரின் வீட்டின் வழியாகவே சர்வதேச எல்லைக்கோடு செல்கிறது. அதாவது வீட்டின் ஒரு பகுதி இந்தியாவிலும் மற்றொரு பகுதி மியான்மரிலும் அமைந்திருக்கிறது. நாகலாந்தில் உள்ள மோன் மாவட்டத்தில் இந்த கிராமம் உள்ளது.

கிராம தலைவர் ஆங் என அழைக்கப்படுகிறார். மோன் மாவட்டத்தில் மொத்தம் 7 ஆங் உள்ளனர். ஒவ்வொரு ஆங்கிற்கு கீழும் சில கிராமங்கள் உள்ளன. இவற்றுள் சில அருணாச்சல பிரதேசம் மற்றும் மியான்மர் எல்லையில் அமைந்திருக்கின்றன.

Longwa only indian village with dual citizenship situated in Nagaland

இந்தியாவை பொறுத்தவரையில் இரட்டை குடியுரிமை என்பது கிடையாது. இந்தியர் ஒருவர் வேறு நாட்டில் குடியுரிமை பெற்றால் அவர்கள் இந்திய குடியுரிமையை தானாகவே இழந்துவிடுவர். இதுவே லாங்வா கிராமத்தின் விசேஷமாகவும் பார்க்கப்படுகிறது. இங்கே,  கொன்யாக் நாகா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழ்கின்றனர். மனிதர்களை வேட்டையாடும் பழங்குடி இனமாக கருதப்படும் கொன்யாக் மக்கள் 1960 களுக்கு பிறகு அந்த வழக்கத்தை கைவிட்டதாக தெரிகிறது. அப்பகுதியின் வளத்திற்கு இந்த பழங்குடி இன மக்களும் முக்கிய காரணம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

Also Read | “யாரு சாமி இவங்க” .. ஓடும் ரயில்ல ஓட்டைய போட்டு எண்ணெயை ஆட்டைய போட்ட ஆசாமிகள்.. வீடியோ..!

LONGWA, INDIAN VILLAGE, DUAL CITIZENSHIP, NAGALAND

மற்ற செய்திகள்