'கேரளாவுக்கு டூர் வந்தப்போ...' பார்த்த 'அந்த ஒரு' காட்சி...! 'மொதல்ல லண்டனுக்கு போட்ட டிக்கெட்ட கேன்சல் பண்ணுங்க...' - வெளிநாட்டு தம்பதிகள் எடுத்த அதிரடி முடிவு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த 12 வருடங்களுக்கு முன்பு லண்டனை சேர்ந்த மேரி (Mary) மற்றும் அவரது கணவர் ஸ்டீவ் மஸ்கிராப்ட் (Steve Muscroft )தம்பதிகள் கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். அப்போது கோவளம் கடற்கரைப் பகுதியில் சுற்றிப்பார்த்த இருவரும் அங்கு தெருவில் சுற்றிக் கொண்டிருந்த 2 தெருநாய்கள் இருந்ததை பார்த்துள்ளனர். அந்த நாய்களோ மெலிந்து, உணவில்லாமல் இருப்பதை பார்த்து பரிதாபப்பட்ட தம்பதி, நாய்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளனர்.

'கேரளாவுக்கு டூர் வந்தப்போ...' பார்த்த 'அந்த ஒரு' காட்சி...! 'மொதல்ல லண்டனுக்கு போட்ட டிக்கெட்ட கேன்சல் பண்ணுங்க...' - வெளிநாட்டு தம்பதிகள் எடுத்த அதிரடி முடிவு...!

சில நாட்களுக்கு பின் மேரி மற்றும் அவரது கணவர் ஸ்டீவ் இருவரும் அந்த நாய்களுடன் நெருங்கி பழகியுள்ளனர். அதோடு தாங்கள் சென்ற பிறகு நாய்களை யார் பார்த்துக் கொள்வார்கள்? என சிந்தித்து லண்டனுக்கு திரும்பும் டிக்கெட்டை ரத்து செய்துள்ளனர்.

london couple came to Kerala stayed care street dogs

அதன்பிறகு தம்பதிகள் இருவரும், கோவளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை எடுத்த  அங்கேயே நிரந்தரமாக தங்க முடிவெடுத்து, தெரு நாய்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

london couple came to Kerala stayed care street dogs

இதுகுறித்து கூறிய மேரி, 'நான் லண்டனில் வசிக்கும்போது மிடில்செக்ஸ் (Middlesex ) பகுதியில் செயல்பட்டு வரும் விலங்குகள் வதை தடுப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான Royal Society for the Prevention of Cruelty to Animals என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தன்னார்வ உறுப்பினராக இருந்துள்ளேன்.

london couple came to Kerala stayed care street dogs

என் கணவர் ஸ்டீவ், சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அப்போதய விடுமுறைக்காக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா வந்தோம். ஆனால் இங்கு வந்ததில் தெரு நாய்களின் நிலையை பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது. உடனடியாக அவற்றுக்கு உதவி செய்ய முடிவெடுத்தோம்' என மேரி தெரிவித்தார்.

london couple came to Kerala stayed care street dogs

நாங்கள் இங்கு பாதுகாத்த 2 நாய்களுக்கு உதவி செய்தபோதும், அவைகளை பாதுகாக்க யாரும் முன்வரவில்லை. தனியாக அவற்றை விட்டுச்செல்ல மனம் இல்லாததால் நாய்களுக்காக, அங்கேயே குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து கணவரும் நானும் தங்கிவிட்டோம்'

london couple came to Kerala stayed care street dogs

இப்போது எங்களுக்கு இப்படி நாய்களுக்கு தேவையானவற்றை செய்து அதனோடு இருப்பதே சந்தோசமாக இருக்கிறது. இப்போது நாங்கள் 140 தெரு நாய்களாக வளரத்து வருகிறோம். இதுவே எங்களுக்கு போதும்' என நெகிழ்யோடு கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்