மக்களவைத் தேர்தலில் களத்திலுள்ள ‘நட்சத்திர வேட்பாளர்கள் நிலவரம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தலில் களத்திலுள்ள ‘நட்சத்திர வேட்பாளர்கள் நிலவரம்’..

மக்களவைத் தேர்தலில் 300க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று பாஜக முதல் இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 35க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழக இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 11 இடங்களிலும், திமுக 11 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

களத்திலுள்ள நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் முன்னிலையில் உள்ளனர். நீலகிரியில் ஆ.ராசா (திமுக), தூத்துக்குடியில் கனிமொழி (திமுக), சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) ஆகியோர்  முன்னிலையில் உள்ளனர். கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக) பின்னடைவைச் சந்தித்திருக்கும் நிலையில் சிதம்பரத்தில் திருமாவளவன் (விசிக), தருமபுரியில் அன்புமணி (பாமக), தேனியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), திருச்சியில் திருநாவுக்கரசர் (காங்கிரஸ்), கரூரில் ஜோதிமணி (காங்கிரஸ்) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

திமுகவின் நட்சத்திர வேட்பாளர்களான தயாநிதி மாறன் மத்திய சென்னையிலும், தமிழச்சி தங்க பாண்டியன் தென்சென்னையிலும், வடசென்னையில் கலாநிதி வீராசாமியும் முன்னிலையில் உள்ளனர். கன்னியாகுமரியில் பொன்.ராதாருஷ்ணன் (பாஜக) , தேனியில் ரவீந்திரநாத் குமார் (அதிமுக) ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

LOKSABHAELECTIONS2019, ELECTIONRESULTS2019, LOKSABHAELECTIONRESULTS2019, VOTECOUNTING