உ.பி.யில் '3 சதுர கிலோமீட்டர்' அளவுக்கு 'படையெடுப்பு...' 'சில்லிட வைக்கும் வீடியோ...' 'பிரயாக்ராஜ்' பகுதியை 'பதம் பார்த்த வெட்டுக்கிளிகள்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரபிரதேசத்தில் ஜான்சி, பன்டேல்கண்ட்டை தொடர்ந்து பிரயாக்ராஜிற்கு வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன.

உ.பி.யில் '3 சதுர கிலோமீட்டர்' அளவுக்கு 'படையெடுப்பு...' 'சில்லிட வைக்கும் வீடியோ...' 'பிரயாக்ராஜ்' பகுதியை 'பதம் பார்த்த வெட்டுக்கிளிகள்...'

மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள் அங்கு சுமார் 500 கோடி டாலர் அளவுக்கு பயிர்களை சேதப்படுத்தியதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவில் படையெடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பொதுவாக ராஜஸ்தானின் எல்லையோடு தனது படையெடுப்பை நிறுத்திக் கொள்ளும் இந்த வெட்டுக்கிளிகள் தற்போது ராஜஸ்தானைத் தாண்டி இந்தியாவிற்குள் படையெடுத்துள்ளது. ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரில் பயிர்களை நாசம்செய்த இந்த வெட்டுக்கிளிகள் தற்போது உத்தரபிரதேசத்திற்குள் நுழைந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஜான், பன்டேல்கண்ட்டை இந்த வெட்டுக்கிளிகள் தாக்கியது. அங்கு ஏராளமான பயிர்களை சேதப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து. முக்கிய நகரான பிரயாக்ராஜ் பகுதிக்கு இந்த வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன.

 

ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கும், 3 கிலோ மீட்டர் அகலத்திற்குமான வெட்டுக்கிளிகளின் கூட்டம் பிரயாக்ராஜ் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை முற்றுகையிட்டுள்ளன. தற்போதைக்கு பயிர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் அம்மாவட்டத்தில் உள்ள கர்சானா வட்டத்தில் வயல்வெளிகளை முழுமையாக வெட்டுக்கிளிகள் சூறையாடியுள்ளது பிற பகுதி விவசாயிகளை கலக்கமடையச் செய்துள்ளது. வீடுகளிலும், சாலைகளிலும் அவை கூட்டம், கூட்டமாக பறந்ததால் மக்கள் தொந்தரவுக்கு ஆளாகினர்.

மற்ற செய்திகள்