‘தற்காலிகமாக சேவையை துண்டித்த’ .. ‘பிரபல கேப் நிறுவனம்!’.. கொரோனா லாக்டவுன் எதிரொலி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா பரவுவதலை தடுக்கும் விதமாக டெல்லியில் நடவடிக்கைகள் மேலோங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக டெல்லி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

‘தற்காலிகமாக சேவையை துண்டித்த’ .. ‘பிரபல கேப் நிறுவனம்!’.. கொரோனா லாக்டவுன் எதிரொலி!

தனிமைப்படுத்தப் படுதலால் கொரோனாவை ஒரு குறிப்பிட்ட நகரம் அல்லது மாவட்டத்தில் இருந்து இன்னொரு நகரம் அல்லது மாவட்டத்துக்கு பரவுவதை தடுக்க முடியும் என்கிற யோசனையில் லாக்டவுன் எனப்படும் தனிமைப்படுத்துதல் முறை உலகம் முழுவதும் கையாளப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொருத்தவரை சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், டெல்லியில் லாக் டவுன் முறை அமல்படுத்தப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் நடமாட்டமும் குறைந்துள்ளது. இதனையடுத்து யூபர் கேப் நிறுவனத்தின் சேவை

தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆப் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

DELHI, LOCKDOWN, CORONAVIRUSININDIA, CORONAVIRUSUPDATE