'மாப்பிள இந்த வீடியோவ போடு, நீ வேற லெவல்ல போய்டுவ'...'உசுப்பேத்திய நண்பன்'... காத்திருந்த ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பேஸ்புக்கில் அதிக லைக்ஸ் பெற வேண்டும் என்பதற்காக, உசுப்பேத்தி விட்ட நண்பனால், இளைஞர் காவல்துறையில் சிக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

'மாப்பிள இந்த வீடியோவ போடு, நீ வேற லெவல்ல போய்டுவ'...'உசுப்பேத்திய நண்பன்'... காத்திருந்த ட்விஸ்ட்!

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 இன்று வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், மே 3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் இன்று உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என அரசு உத்தரவிட்டுள்ளதால், தமிழகம், தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள மதுக்கடைக்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.

இந்தசூழ்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சம்பாபேட் பகுதியை சேர்ந்த 30 வயது நிரம்பிய நபர், ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால், தனது பகுதியில் உள்ள குடிமகன்களுக்கு அவர் மதுவை இலவசமாக வழங்க, அதனை அருகில் இருந்த அவரது நண்பர்கள்  வீடியோவாக எடுத்துள்ளார்கள். அதோடு சும்மா இருக்காமல், மது கொடுத்த நபரின் நண்பன் ஒருவன், இந்த வீடியோவை மட்டும் பேஸ்புக்கில் போட்டால் அதிக லைக்ஸ் வரும் என உசுபேத்தியுள்ளார்.

அவரும் லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்டு வீடியோவை பதிவேற்ற, அது சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதோடு போலீசாரின் கண்ணிலும் சிக்கியது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஊரடங்கை மீறி சட்ட விரோதமாக மது பிரியர்களுக்கு மது வழங்கிய அந்த நபரை கைது செய்தனர். இதற்கிடையே உசுப்பேத்திய நண்பன் எஸ்கேப் ஆக மது கொடுத்த நபர் மட்டும் தற்போது கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார்.