'ஜூன் 30' வரை... 'பொது முடக்கம்' நீட்டிப்பு... Unlock 1.0 வில் சில முக்கிய 'விதிகள்' உள்ளே!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட நான்காம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவு பெறவுள்ள நிலையில், ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் குறித்து முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஜூன் மாதம் முப்பதாம் தேதி வரை பொது முடக்கம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுள்ள பகுதிகளில் சில முக்கிய தளர்வுகளையும் அறிவித்துள்ளது. ஜூன் 8 - ம் தேதி முதல் நாட்டிலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்கள், ஓட்டல்கள், உணவகங்கள்,ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவற்றை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இங்கு சுகாதாரத்துறை வகுத்துள்ள விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
அதே வேளையில், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள் போன்றவை அந்தந்த மாநில அரசுகளின் வழிகாட்டுதல் படி, திறந்து கொள்ளலாம். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்களுடன் கல்வி நிலைய நிர்வாகிகள் ஆலசோனை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஜூலை மாதம் முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும், திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே அறிவித்த கட்டுப்பாடுகள் தொடரும். சர்வதேச விமானங்கள், மெட்ரோ ரயில், சினிமா திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் போன்றவை கொரோனா பாதிப்பு நிலைமையை பொறுத்து செயல்பட அனுமதி அளிக்கப்படும். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை தனிநபர்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் அவசிய தேவைக்காக மட்டும் வெளியே செல்லலாம்.
மற்ற செய்திகள்