'அடினா அடி, இவங்களுக்கு தான் பேரடி'... '84.3 பில்லியன் டாலர்கள் பேரிழப்பு'... எப்படி தாங்கி கொள்ள போறாங்க?
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் அடியோடு முடங்கியுள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் கூட ஆட்குறைப்பு மற்றும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விமான போக்குவரத்து துறை மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக விமான போக்குவரத்து அடியோடு முடங்கியது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விமான போக்குவரத்தை தொடங்கி உள்ளன. ஆனாலும் வழக்கமான சேவை என்பது இன்னும் முழுமையாக தொடங்கப்படவில்லை. அதோடு பயணிகள் எண்ணிக்கையும் குறைந்த அளவிலேயே இருப்பதால் விமான நிறுவனங்களுக்கு பெரிய அளவில் வருவாய் இல்லை. இந்நிலையில் தற்போதைய நிலை குறித்து விமான போக்குவரத்து துறையின் நிதி நிலை தொடர்பாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக, உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்களுக்கு 2020 ஆம் ஆண்டில் 84.3 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விமான போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான மற்றும் எதிர்பார்க்காத ஆண்டாகும். விமான நிறுவனங்களின் வருவாய் கடந்த ஆண்டு 838 பில்லியன் டாலராக இருந்தது. இந்த ஆண்டு 50 சதவீதம் குறைந்து, 419 பில்லியன் டாலராக இருக்கும்.
அதே நேரத்தில் 2021ஆம் ஆண்டில், இழப்புகள் 15.8 பில்லியன் டாலராகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமை படிப்படியாக குறைந்து வருவாய் 598 பில்லியன் டாலராக உயரும்.என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்