'Live-in relationship சரியா?.. தவறா'?.. மிரட்டும் உறவினர்கள்!.. தவிக்கும் தம்பதி!.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணம் செய்து கொள்ளாமல் live-in relationship-ல் இணைந்து வாழும் உறவுமுறை குறித்து உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
Live-in relationship-ல் இணைந்து வாழும் தம்பதியரில் ஒருவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பு வேண்டி அந்த இணையர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். கடந்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் இருவேறு கிளைகள் live-in உறவுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
ஆனால், தற்போது அதே நீதிமன்றம், "ஒவ்வொரு தனிமனிதனும் அவரது விருப்பப்படி அவரது இணையருடன் திருமணம் செய்து கொண்டு சட்டமுறைப்படி வாழ்வதும் அல்லது லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்வதும் அவரவர் உரிமை. இந்த முடிவில் அவரது குடும்பத்தினர் கூட தலையிட முடியாது.
அதே நேரத்தில் இந்தியாவில் இந்த உறவில் எந்தவித சட்ட ரீதியிலான தடையும் இல்லை. அதனால் இந்த உறவில் இருப்பவர்களுக்கு, எல்லோருக்கும் இருப்பது போலவே சம அளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில் இந்த உறவுமுறை இப்போது பெருநகரங்களை கடந்தும் பிரபலம் அடைந்து வருகிறது" என தெரிவித்துள்ளார் நீதிபதி சுதீர் மிட்டல்.
"பெற்றோரின் விருப்பத்திற்கு எதிரான திருமணத்திற்கும் சில சமயங்களில் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இந்த உறவு முறையும் அதற்கு சமமானது தான். சட்டத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நாட்டை சேர்ந்த பிரஜை சட்டத்தை தான் கையில் எடுத்துக் கொள்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என நீதிபதி தெரிவித்துள்ளார்.
Live in relationship-ல் இணைந்து வாழும் தம்பதியரில் ஒருவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உறவை முறித்துக் கொள்ளுமாறு மிரட்டலும் விடுத்துள்ளனர். அதன் பிறகு தான், அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதற்கு முன்னதாக அவர்கள் காவல் நிலையத்தில்தான் முறையிட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உரிய பதில் கிடைக்காததால் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்