“கணவர்களே... கணவர்களே.. லைஃப் இன்சூரன்ஸை.. புதுப்பிக்க வாழ்த்துக்கள்!!”.. கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வாலின் ‘வைரல்’ ட்வீட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கணவரது ஆயுள் நீட்டிப்புக்காக வட மாநில பெண்கள் கர்வா சவுத் என்கிற விழாவை மேற்கொள்கின்றனர்

“கணவர்களே... கணவர்களே.. லைஃப் இன்சூரன்ஸை.. புதுப்பிக்க வாழ்த்துக்கள்!!”.. கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வாலின் ‘வைரல்’ ட்வீட்!

இந்த நிலையில் தங்களின் லைஃப் இன்ஷூரன்ஸை புதுப்பிக்க, கணவர்களுக்கு பஞ்சாப் அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வால், குறும்புடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த 2018ல் ஆஷிதா சூட் என்பவரை திருமணம் செய்த நிலையில் இவருடைய வீட்டிலும் இந்த விழா களைகட்டியது. இதுபற்றி பேசிய மயங்க் அகர்வால் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் இந்த பண்டிகையில் அனைவரது வீடுகளிலும் அன்பு, மகிழ்ச்சி உள்ளிட்டவை நிறையட்டும் என்று ட்விட்டர் மூலம் தெரிவித்ததுடன் இந்த கர்வா சவுத் தினத்தில் அனைவரும் மனைவியுடன் சிறப்பாக வாழவேண்டும் என்று குறிப்பிட்டார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய மயங்க் அகர்வால் அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 670 ரன்களை குவித்துள்ள நிலையில், மயங்க் அகர்வால் 11 போட்டிகளில் விளையாடி 424 ரன்களை குவித்து, அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்