ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் துருக்கியில் மரணம்.. இந்தியாவில் நடைபெறும் இறுதிச்சடங்கு.. யார் இந்த முக்காராம் ஜா பகதூர்?
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத்தின் கடைசி நிஜாம் என அழைக்கப்படும் மீர் பர்காத் அலி கான் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து அவருடைய இறுதி சடங்கு இந்தியாவில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | "விடிஞ்சா கல்யாணம்".. பல கனவுகளை மனசுல சுமந்துட்டு சிரிச்ச முகத்தோட நின்ன பொண்ணு.. திடீர்ன்னு நடந்த சோகம்!!
ஹைதராபாத் சமஸ்தானத்தின் ஏழாவது நிஜாம் மிர் உஸ்மான் அலி கானின் முதல் மகனான மீர் ஹிமாயத் அலி கான் என்பவருக்குப் பிறந்தவர் மீர் பர்காத் அலி கான். 1933 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி பிறந்த இவரை பலரும் முக்காராம் ஜா எனவே அன்புடன் அழைத்து வந்தனர். இவரது தாயார், இளவரசி துரு ஷேவார், துருக்கியின் கடைசி சுல்தான் அப்துல் மெஜித் II இன் மகள் ஆவார்.
இளவரசர் முக்காராம் ஜா ஜூன் 14, 1954 அன்று ஆசஃப் ஜாஹி வம்சத்தின் தலைவராக அவரது தாத்தாவால் நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து, அவர் ஹைதராபாத்தின் எட்டாவது மற்றும் கடைசி நிஜாமாக அடையாளம் காணப்பட்டார். 1971 ஆம் ஆண்டு வரை நிஜாம் பொறுப்பில் இருந்தார். அதன்பின்னர் குடும்பத்துடன் துருக்கியில் குடிபெயர்ந்தார் ஜா. இவருக்கு 4 மனைவிகளும் 5 குழந்தைகளும் உள்ளனர்.
80 வயதான ஜா, கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை குன்றிய நிலையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், அவர் மரணமடைந்திருப்பதாக அவருடைய குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து, ஜா-வின் விருப்பப்படி அவருடைய உடல் ஹைதராபாத்தில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவருடைய உடல் இந்தியாவுக்கு எடுத்துவரப்பட்ட நிலையில் மெக்கா மசூதியில் அவரது தந்தை ஆசம் ஜாவின் கல்லறை அருகே அவரது உடல் அடக்கம் மாலை 4 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், இளவரசர் முக்காராம் ஜாவுக்கு, ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சமூக சேவை செய்ததற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் உயரிய மாநில கவுரவத்துடன் இறுதி சடங்குகளை நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
மற்ற செய்திகள்