Naane Varuven M Logo Top
PS 1 M Logo Top

உலகத்தின் மிகப்பெரிய திட்டம்.. 10 ஆயிரம் ஏக்கரில் மாஸ் காட்ட இருக்கும் இந்தியா.. பிரம்மிக்க வைக்கும் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சஃபாரி பார்க்கை (safari park) கட்டமைக்க இருப்பதாக ஹரியானா முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

உலகத்தின் மிகப்பெரிய திட்டம்.. 10 ஆயிரம் ஏக்கரில் மாஸ் காட்ட இருக்கும் இந்தியா.. பிரம்மிக்க வைக்கும் பின்னணி..!

Also Read | உலக பணக்காரர்கள் பட்டியல்.. திடீர் பின்னடைவை சந்தித்த தொழிலதிபர் அதானி.. முழுவிபரம்..!

ஹரியானாவின் ஆரவல்லி மலைத்தொடரில் 10,000 ஏக்கர் பரப்பளவில் இந்த பார்க் அமைய இருக்கிறது. குருகிராம் மற்றும் நுஹ் மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய திட்டம்

இதுபற்றி அவர் பேசுகையில்,"உலகிலேயே மிகப்பெரிய திட்டமாக இது இருக்கும். தற்போது, ஆப்பிரிக்காவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய சஃபாரி பூங்கா ஷார்ஜாவில் உள்ளது. அது சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. தற்போது முன்மொழியப்பட்ட ஆரவல்லி பூங்கா இதைவிட ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும்" என்றார்.

Largest Jungle Safari Park Outside Africa To Be Developed In Haryana

இந்த சஃபாரியில் பெரிய ஹெர்பெடேரியம் (ஊர்வன மற்றும் விலங்கியல் கண்காட்சி இடம்), பறவை மற்றும் விலங்குகளுக்கான இடம், புலிகளுக்கு நான்கு மண்டலங்கள், தாவரவகைகளுக்கு ஒரு பெரிய பகுதி, நீருக்கடியில் அமையும் கண்காட்சி, பல்வேறு நில அமைப்புகளில் வளரும் தாவரங்களின் கண்காட்சி ஆகியவை இடம்பெற இருப்பதாகவும் கட்டார் தெரிவித்திருக்கிறார்.

கட்டார் மற்றும் மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவும் சமீபத்தில் ஷார்ஜா சஃபாரியை பார்வையிட்டனர். பயணம் முடிந்து ஊர் திரும்பிய நிலையில் கட்டார் இந்த பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ஹரியானாவின் என்சிஆர் பகுதியானது ஜங்கிள் சஃபாரியின் வளர்ச்சிக்கு உகந்த இடம் என்றும், இது சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கும் என்றார்.

Largest Jungle Safari Park Outside Africa To Be Developed In Haryana

நிதி

இந்த திட்டத்தின் நிதி பங்களிப்பு குறித்து பேசிய கட்டார்,"இது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் மற்றும் ஹரியானா அரசின் கூட்டு திட்டமாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசு திட்டத்திற்கான நிதியை வழங்கும்" என்றார். இதுபோன்ற இடங்களை உருவாக்கும் பிரபலமான இரண்டு நிறுவங்களிடம் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கட்டார் அறிவித்திருக்கிறார். மேலும், ஆரவல்லி மலைத்தொடர்களையும் அதில் உள்ள விலங்குகளையும் பாதுகாக்க இந்த திட்டம் உதவும் எனவும் கட்டார் குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read | அமெரிக்காவை புரட்டிப்போட்ட புயல்.. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட நாசா.. யம்மாடி என்ன இப்படி இருக்கு..!

LARGEST JUNGLE, HARYANA, AFRICA, SAFARI PARK, LARGEST JUNGLE SAFARI PARK, BHUPENDER YADAV, YADAV VISIT SHARJAH SAFARI PARK

மற்ற செய்திகள்