Hulk தான் இத யூஸ் பண்ணலாம்.. உலகத்தின் மிகப்பெரிய பால் பாயிண்ட் பேனா.. கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்..மிரளவைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர், உலகின் மிகப்பெரிய பால் பாயிண்ட் பேனாவை தயாரித்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்.
Also Read | கல்யாண வீட்டுல கேட்ட பயங்கர சத்தம்.. மணப்பெண்ணின் நண்பர் செஞ்ச விபரீதத்தால் சோகத்தில் முடிந்த திருமணம்..!
உலகின் மிகப்பெரிய பால் பாயிண்ட் பேனா
ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீநிவாசா. ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர் உலகின் மிகப்பெரிய பால் பாயிண்ட் பேனாவை தயாரித்து அசத்தியிருக்கிறார். இந்த சாதனையை அங்கீகரித்து கின்னஸ் நிர்வாகம் இவருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.
5.5 மீட்டர் (18 அடி, 0.53 அங்குலம்) நீளமும் 37.23 கிலோகிராம் எடையும் கொண்ட இந்த பேனாவை தூக்கிச் செல்லவே குறைந்தது நான்கு பேராவது வேண்டும். முழுவதும் பித்தளையால் இந்த பேனாவின் வெளிப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. எழுதும்போது, மை வெளிவரும் விதத்தில் சிறிய உலோக உருளை ஒன்றும் நுனியில் பொருத்தப்பட்டு உள்ளது.
கின்னஸ் சாதனை
இந்த பிரம்மாண்ட பேனாவை கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி ஹைதராபாத்தில் அளவிட்டது கின்னஸ் நிர்வாகம். இதன் அடிப்படையில் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பேனா குறித்த வீடியோவை கின்னஸ் நிர்வாகம் தற்போது பகிர்ந்துள்ளது அதில்,"இந்திய புராண காட்சிகளுடன் பொறிக்கப்பட்ட இந்த பால்-பாயின்ட் பேனா இந்தியாவைச் சேர்ந்த ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீனிவாசா என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இது 5.5 மீ (18 அடி 0.53 அங்குலம்) நீளம், 37.23 கிலோ (82.08 எல்பி 1.24 அவுன்ஸ்) நீளம் கொண்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீனிவாசா," சிறிய வயதில் என்னுடைய அம்மா பேனாக்களை கொடுக்கும்போது நானும் ஒருகாலத்தில் மிகப்பெரிய பேனாவை உருவாக்க வேண்டும் என நினைப்பேன். ஆடல் கலையில் உள்ள 9 அம்சங்களையும் இசைக்கருவிகளின் தோற்றத்தையும் இந்த பேனாவின் வெளிப்புறத்தில் செதுக்கியுள்ளேன்" என்றார்.
வைரல் வீடியோ
உலகின் மிகப்பெரிய பால் பாயிண்ட் பேனாவின் வீடியோவை கின்னஸ் நிர்வாகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, 'இந்த பேனாவை ஹல்க் மட்டுமே உபயோகிக்க முடியும்' என்றும் 'நான் இதனை ராக்கெட் என நினைத்தேன்' எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்