லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரகம் அளிக்கும் மகள் ரோகிணி.. டிவிட்டரில் நெகிழ்ச்சியான பதிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாலாலு பிரசாத் யாதவ், முன்னாள் பீகார் முதலமைச்சர் & முன்னாள் முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் என்ற பல பொறுப்புகளை வகித்தவர்.
தற்போது லாலு பிரசாத் யாதவுக்கு 74 வயது. வயது முதிர்வு காரணமாக சில உடல் நல குறைவு காரணமாக அவதியுற்று வருகிறார். சமீபத்தில் கூட எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத் யாதவ், தற்போது ஜாமீனில் வெளிவந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவருக்கு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு தேவையான சிறுநீரகத்தை வழங்க லூலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா முன்வந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்து ரோகிணி உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது ட்வீட்டில், " எனது பெற்றோர் தான் எனக்கு கடவுள்கள். அவர்களுக்காக நான் எது வேண்டுமானாலும் செய்வேன். ஒரு சிறிய சதைப்பகுதியை என் தந்தைக்கு கொடுக்க விரும்புகிறேன். அவருக்காக என்னால் எதையும் செய்ய முடியும். தயவு செய்து எல்லாம் நல்லபடியாக நடக்கவும், உங்கள் அனைவருக்கும் குரல் கொடுக்க அப்பா மீண்டும் தகுதியுடையவராகவும் இருக்க பிரார்த்தனை செய்யுங்கள்" என்று ரோகிணி ட்வீட் செய்துள்ளார். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட தனது தந்தையின் இரண்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
லாலு பிரசாத் தற்போது டெல்லியில் தனது மூத்த மகள் மிசா பார்தியின் வீட்டில் இருக்கிறார். கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வெளிநாடு செல்ல நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்பதால் அதற்கான முன்னெடுப்புகள் நடந்து வருகின்றன.
கடந்த மாதம் தனது சிறுநீரகப் பிரச்சனைகளுக்காக சிங்கப்பூர் சென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி லாலு பிரசாத் யாதவ் இந்தியா திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.
मेरा तो मानना है की ये तो बस एक छोटा सा मांस का टुकड़ा है जो मैं अपने पापा के लिए देना चाहती हूँ.
पापा के लिए मैं कुछ भी कर सकती हूँ.आप सब दुआ कीजिए की सब बेहतर तरीके से हो जाये, और पापा फिर से आप सभी लोगों की आवाज़ बुलंद करे.
शुभकामनाओं के लिए पुनः एक बार आप सबका आभार. 🙏🙏 pic.twitter.com/536nQyRbrp
— Rohini Acharya (@RohiniAcharya2) November 11, 2022
மற்ற செய்திகள்