போர்க்கப்பல்கள், 'சின்னூக்' ஹெலிகாப்டர்கள், விமானப்படை... 'தக்க' பதிலடி கொடுக்க... 'முப்படைகளை' களமிறக்கும் இந்தியா!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா-சீனா இரு நாடுகளும் எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்களை குவிக்க ஆரம்பித்துள்ளன.
இந்தியா-சீனா இடையே நீண்ட காலமாக இருக்கும் எல்லைப்பிரச்சினை தற்போது மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் மொத்த உலகமும் மிகப்பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. குறிப்பாக வேலையின்மை, பொருளாதார சரிவு, பசி, பட்டினி ஆகிய காரணங்களால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் சீனா தற்போது இந்தியாவுடன் எல்லைப்பகுதியில் தகராறு செய்ய ஆரம்பித்து இருக்கிறது. இரண்டு நாடுகளும் இதை பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்க வேண்டும் என முயற்சி செய்து வருகின்றன. ஆனால் ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என சீன அதிபர் ஜின்பிங் சமீபத்தில் உத்தரவிட்டார். இதையடுத்து உலக நாடுகள் இந்த பிரச்சினையை உற்றுக்கவனிக்க ஆரம்பித்து இருக்கின்றன.
இந்த நிலையில் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்தியா அனைத்து வழிகளிலும் தயாராகி வருகிறது. சி-451 எனப்படும் போர் கப்பல்களை இந்தியா களமிறக்கியது. இந்த கப்பல் தற்போது சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை, மாறாக எதிர்பக்கம் விசாகப்பட்டினம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. கிழக்கு திசையில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த போர் கப்பல்கள் களமிறக்கப்பட்டுள்ளது. ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சிறிய ரக போர் கப்பல்கள் இது ஆகும்.
இன்னொரு பக்கம் சீனா அருகே இருக்கும் இந்திய மாநிலங்களில் நவீன ரக சின்னூக் ஹெலிகாப்டர்களை களமிறக்க இந்திய இராணுவம் முடிவு செய்துள்ளது.இதன் மூலம் எல்லையில் பாதுகாப்பு பணிகளை, ரோந்து பணிகளை செய்ய முடியும். அதன்படி முதல் கட்டமாக அசாமில் தற்போது சின்னூக் ஹெலிகாப்டர்களை இராணுவம் களமிறக்கி உள்ளது.இந்த சின்னூக் ஹெலிகாப்டர்கள் மிகவும் நவீன ரக ஹெலிகாப்டர்கள் ஆகும். இதன் மூலம் அதிக எடையை எடுத்து செல்ல முடியும். மலை இருக்கும் பகுதிகள், மேடான பகுதிகளில் அதிக எடை உள்ள பொருட்களை இதன் மூலம் கொண்டு செல்ல முடியும்.
மறுபுறம் விமானப்படையும் மிக தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.தஞ்சாவூரில் இருக்கும் விமானப்படை தொடங்கி பெங்களூர், உத்தர பிரதேசம், குஜராத் எல்லையில் இருக்கும் படைகள் கூட தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எல்லைப்பகுதி வீரர்களும் மிகுந்த உத்வேகத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தரைப்படை, கப்பற்படை, விமானப்படை என அனைத்து வழிகளிலும் சீனாவிற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்