"இதைவிட என்ன வேணும்".. மாவட்ட கலெக்டரை மனதார வாழ்த்திய பாட்டி.. வைரலாகும் கலெக்டரின் ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலத்தில் மாவட்ட கலெக்டரை வயதான பாட்டி ஒருவர் ஆசிர்வதித்திருக்கிறார். இந்த புகைப்படத்தை கலெக்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர, அது வைரலாகி வருகிறது.
பொதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்றாலே எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக வாரந்தோறும் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டங்களில் கலந்துகொள்ள ஏராளமான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவது உண்டு. அப்போது பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து அது சம்பந்தமாக நடவடிக்கையும் எடுக்கப்படும். அப்படி சமீபத்தில் கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற வயதான பெண்மணி ஒருவர் கலெக்டரை ஆசிர்வதித்துள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் ஆழப்புழா மாவட்டத்தில் கலெக்டராக இருந்த ஸ்ரீராம் வெங்கடராமன் பணிமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தின் கலெக்டராக பதவி ஏற்றுள்ளார் V. R. கிருஷ்ண தேஜா. பொதுமக்களிடத்தில் அன்போடு பழக்கக்கூடிய இவருக்கு மக்கள் மத்தியிலும் நற்பெயர் இருக்கிறது. குறிப்பாக V. R. கிருஷ்ண தேஜா ஆழப்புழாவின் கலெக்டராக பதவியேற்ற சமயம் அங்கே தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்திருந்தது.
அப்போது, குழந்தைகளுக்கு அவர் சோசியல் மீடியாவில் வழங்கிவந்த அன்பான அறிவுரைகள் பலரையும் நெகிழ செய்தது. இந்நிலையில், சமீபத்தில் வயதான பெண் ஒருவர் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். அவருடைய கோரிக்கைகளை ஆட்சியர் V. R. கிருஷ்ண தேஜா ஐஏஎஸ் அன்புடன் விசாரித்ததாக தெரிகிறது. இதனால் நெகிழ்ச்சியடைந்த அந்த வயதான பெண்மணி, ஆட்சியரின் தலைமீது கைவைத்து ஆசிர்வாதம் செய்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை V. R. கிருஷ்ண தேஜா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அந்த புகைப்படத்தில் வயதான பெண்மணி கலெக்டருக்கு வாழ்த்து தெரிவிக்க, உடன் இருந்த பணியாளர் இதனை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். இப்புகைப்படத்தை பகிர்ந்து,"இதை விட வேறு என்ன வேண்டும்?" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் V. R. கிருஷ்ண தேஜா ஐஏஎஸ்.
அவருடைய இந்த பதிவை இதுவரையில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்திருக்கின்றனர். மேலும், "உங்கள் பணிவு தான் உங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. பெரியவர்களின் ஆசிர்வாதத்தை விட உலகத்தில் சிறந்தது வேறு ஒன்றும் இல்லை" எனவும் "பெரியவர்களின் ஆசிர்வாதம் உங்களை நல்ல நினைக்குக் கொண்டு செல்லும். நீங்கள் எந்த அளவிற்கு உயர்ந்த இடத்தை அடைந்தாலும் இந்த பணிவை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள்" என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.
What else u need 😊😊 #IAmForAlleppey pic.twitter.com/c0rjYUoHAk
— Krishna Teja IAS (@mvrkteja) November 7, 2022
Also Read | "என்ன ஆனாலும் அதை மட்டும் நடக்கவிட மாட்டோம்".. இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லரின் பரபர பேச்சு.. என்னவாம்?
மற்ற செய்திகள்