'அவ பத்திரமா இருக்காம்மா...' எங்க குழந்தை எங்கள விட்டு போய்ட்டான்னு எப்படி சொல்வேன்...? 'மனைவிடம் மறைத்து வரும் கணவன்...' நெஞ்சை உருக செய்யும் சோகம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

துபாயிலிருந்து விமானத்தின் மூலம் கேரளா சென்ற விபத்தில், தன் குழந்தை உயிரிழந்ததை மனைவியிடம் சொல்லாமல் மறைத்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'அவ பத்திரமா இருக்காம்மா...' எங்க குழந்தை எங்கள விட்டு போய்ட்டான்னு எப்படி சொல்வேன்...? 'மனைவிடம் மறைத்து வரும் கணவன்...' நெஞ்சை உருக செய்யும் சோகம்...!

துபாயில் தொலைத் தொடர்பு தயாரிப்புகளை கையாளும் ஒரு தனியார் நிறுவனத்தின் குழுத் தலைவராக பணிபுரியும் 31 வயதான முர்தாசா என்பவர்  தன் மனைவியின் விசா காலம் முடிவடைய உள்ளதால், சுமய்யா தஸ்னீம் (27) மற்றும் 2 வயதான குழந்தையோடு சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் துபாயிலிருந்து கோழிக்கோடு சென்ற விபத்துக்குள்ளான விமானத்தில் சுமய்யா தஸ்னீம் மற்றும் குழந்தை ஆயிஷா பயணித்துள்ளனர். இந்நிலையில் விமான விபத்தின் போது சுமய்யா தஸ்னீ பலத்த காயங்களோடு தப்பியுள்ளார். ஆனால் அவர்களின் 2 வயது குழந்தை ஆயிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

மேலும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியின் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் தன் மனைவி சுமய்யா தஸ்னீமாவிடம் குழந்தை உயிரிழந்ததை கூறாமல் மறைத்து வருகிறார்.

இதுகுறித்து கூறும் முர்தாசா, 'நான் இதுவரை எங்கள் குழந்தை எங்களை விட்டு பிரிந்ததை சொல்லவில்லை. என் மனைவி என்னை கேட்கும்போதெல்லாம் குழந்தை வேறொரு மருத்துவமனையில் இருப்பதாக கூறிவருகிறேன்.

மேலும், எனது மனைவியும் குழந்தையும் மார்ச் 1-ம் தேதி  துபாய் வந்தனர். அவர்களின் விசா ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைய உள்ளது. எனவே வந்தே பாரத் மிஷன் விமானங்களின் சேவை அறிவிக்கப்பட்டபோது, ​​ஆகஸ்ட் 7-ஆம் தேதி கோழிக்கோடுக்கு செல்ல விமான முன்பதிவு செய்தேன். நான் வேறொரு தேதியைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும், ஆனால் என்ன செய்வது. என்னால் நேரடியாக கோழிக்கோடு செல்ல முடியவில்லை. அதனால் என் வாழ்க்கை இப்போது மாறிவிட்டது. இப்போதைக்கு என் மனைவி நலமடைய வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்' என்று கலக்கமடைந்த நிலையில் முர்தாசா கூறியுள்ளார்.

மேலும் மகள் ஆயிஷாவின் உடலும் அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்