‘செல்ஃபோனால் சிக்கிய இளம்பெண்’.. ‘காதலனுடன் சேர்ந்து போட்ட அதிரவைக்கும் திட்டம்’.. ‘கணவருக்கு நேர்ந்த கொடூரம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாகொல்கத்தாவில் கணவரைக் கொலை செய்த இளம்பெண்ணும் அவருடைய காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகாரைச் சேர்ந்த தம்பதி நிர்மல் குமார் - சோனாலி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கொல்கத்தாவில் உள்ள டைமண்ட் ஹார்பர் ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மேனேஜராகப் பணியாற்றி வந்த நிர்மல், கடந்த 10ஆம் தேதி ராய் நகர் அருகே உள்ள கால்வாயிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவருடைய மனைவி சோனாலி தான் முதலில் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தன் கணவர் மதுபோதையில் கால் தவறி கால்வாய்க்குள் விழுந்திருக்கலாம் என சோனாலி கூறியுள்ளார். பின்னர் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் நிர்மல் உடலில் காயங்கள் இருந்தது, அவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சோனாலி முன்னுக்குப்பின் முரணாகவே பேசியதால் சந்தேகமடைந்த போலீஸார் அவருடைய ஃபோன்கால் விவரங்களை சேகரித்துள்ளனர். அதில் அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஜமீல் என்பவருடன் தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்துள்ளது. அதுகுறித்து போலீஸார் கேட்டபோது சோனாலி சரிவர பதிலளிக்காமல் இருந்துள்ளார். பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமணத்திற்கு முன்னதாக சோனாலி, ஜமீல் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சோனாலியின் குடும்பத்தினர் அவருடைய விருப்பத்துக்கு மாறாக அவருக்கு நிர்மல் குமாருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன்பிறகும் ஜமீலுடன் பழகுவதை நிறுத்தாத சோனாலி அவருடன் ஃபோனில் தொடர்பிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சோனாலியின் ஃபோனைப் பார்த்ததில், இதுகுறித்து தெரிந்துகொண்ட நிர்மல் அவரைக் கண்டித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சோனாலி ஜமீலுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்துவிட்டு, வெளி நாட்டிற்குச் சென்று செட்டில் ஆக திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த 10ஆம் தேதி நிர்மல் தூங்கிய பிறகு சோனாலி ஜமீலுக்கு ஃபோன் செய்து வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின் இருவரும் சேர்ந்து நிர்மலின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து, அருகே உள்ள கால்வாயில் உடலைப் போட்டுவிட்டு விபத்து போல சித்தரிக்க முயற்சித்து போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.