கட்டுக்கட்டா பணத்துடன் 'பார்க்'கில் சுற்றி வந்த இளைஞர்...! இவ்ளோ பணம் 'எப்படிங்க' உங்க கையில வந்துச்சு...? - அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் மாநாகராட்சிக்கான தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்ட விரோதமான சமாச்சாரங்கள், போதைபொருள் புழக்கங்களை தடுக்கும் விதமாக அப்பகுதியில் காவல்துறையினர் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டுக்கட்டா பணத்துடன் 'பார்க்'கில் சுற்றி வந்த இளைஞர்...! இவ்ளோ பணம் 'எப்படிங்க' உங்க கையில வந்துச்சு...? - அதிர்ச்சி சம்பவம்...!

இந்த நிலையில், அப்பகுதியில் மக்கள் அன்றாடம் வரும் ஒரு பரபரப்பான  பூங்காவில் சந்தேகப்படும்படியாக கைநிறைய பணத்துடன் ஒருவர் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எப்படி அவர் கையில் இவ்வளவு பணம் இருக்கிறது என மக்கள் குழம்பி தவித்தனர். அவர் கையில் கட்டுக்கட்டா நிறைய பணம் இருப்பது அங்கிருந்த மக்களுக்கு தெரிந்தது. ஆனால் அவர்கள் அவரிடம் எதுவும் விசாரிக்கவில்லை. உடனடியாக போலீசாருக்கு மட்டும் தகவல் கொடுத்தனர்.

தகவலை கேள்விப்பட்ட உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த இளைஞரை மடக்கி பிடித்து விசாரித்தபோது அவர் கொல்கத்தாவில் உள்ள பேங்க்சல் பகுதியை சேர்ந்த மஹேஷ்ட்டல என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அவர் வைத்திருந்த பை முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளால் நிரப்பப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அதை பறிமுதல் செய்தனர். திருட்டுப் பணமாக இருந்தால் இப்படி வெளிப்படையாக சுற்றுவதற்கு வாய்ப்பு குறைவு.

அவரிடம் இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்பது குறித்து கேட்ட போது, அவர் எதுவுமே பேசாமல் மெளனமாக இருந்ததால் போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சாதாரண மனிதனிடம் எப்படி இவ்வளவு பணம் வந்தது என்பது விலகாத மர்மமாகவே உள்ளது. பட்டப்பகலில் ஒருவர் ஒரு கோடி பணத்துடன் சுற்றி வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

KOLKATA, ONE CRORE, PARK, கொல்கத்தா, பூங்கா, ஒரு கோடி

மற்ற செய்திகள்