"புருஷன காணோம்ங்க ஐயா".. விசாரணையில் இறங்கிய போலீஸ்.. கடைசில சிக்கிய அம்மாவும், மகனும்".. நடுங்க வைத்த பயங்கரம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாநபர் ஒருவர் காணவில்லை என அவரது மனைவி மற்றும் மகன் புகார் அளித்திருந்த நிலையில், இது தொடர்பாக தெரிய வந்த விஷயம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தாவின் புறநகர் பகுதியான பரூய்ப்பூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் உஜ்வால் சக்ரோபர்த்தி (வயது 55). இவருக்கு ஷ்யாமளி என்ற மனைவியும், ராஜு என்ற மகனும் உள்ளனர்.
இந்திய கடற்படையில் பணிபுரிந்து வந்த உஜ்வால், விருப்ப ஓய்வு பெற்று அண்மையில் தான் சொந்த ஊர் திரும்பி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில், பாதுகாப்பு அதிகாரியாகவும் உஜ்வால் வேலைக்கு சேர்ந்ததாக தெரிகிறது.
அப்படி ஒரு சூழலில் கடந்த சில தினங்கள் முன்பாக உஜ்வாலை காணவில்லை என அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசாரும் விசாரணையில் இறங்கிய உஜ்வாலை தேடி வந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள குளத்தில் தலை ஒன்று நீரில் மிதந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இது தொடர்பாக நேரில் சென்று விசாரித்த போது அது உஜ்வாலின் தலை தான் என்பதும் உறுதியானது.
இது தொடர்பாக உஜ்வாலாவின் மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு அவர்கள் வந்துள்ளனர். அவர்கள் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் உருவாகவே, உஜ்வால் இறப்பு குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி இருந்தது.
பாதுகாப்பு அதிகாரியாக இருந்து வந்த உஜ்வால் மது பழக்கத்திற்கு அடிமை ஆனதாக கூறப்படுகிறது. இதனால் மது அருந்தி விட்டு மனைவி மற்றும் மகனுடனும் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பெயரில் அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டு வந்த நிலையில், பக்கத்து வீட்டுக்காரர்களுடனும் தகராறில் உஜ்வால் ஈடுபட்டு வந்துள்ளார்.
மனைவி மற்றும் மகன் ஆகியோரும் உஜ்வாலை வெறுத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக குடித்து விட்டு உஜ்வால் சண்டை போட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதில் மனைவி ஷ்யாமளியை உஜ்வால் அடித்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், கோபத்தில் இருந்த மகன் ராஜு தந்தையை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர், தாய் உதவியுடன் தந்தையின் உடல் பாகங்களை வெட்டி சுற்றி உள்ள குளம் மற்றும் புதர்கள் உள்ளிட்ட இடங்களிலும் வீசி உள்ளனர்.
போலீசார் விசாரணையில் இந்த தகவல் தெரிய வந்த நிலையில், அவர்களை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read | ஒரு நாளைக்கு 4500 பேரா.?.. தமிழகத்தில் வேகமெடுக்கும் Medras Eye .. அமைச்சர் மா.சுப்ரமணியம் சொல்வது என்ன ?
மற்ற செய்திகள்