அவங்களுக்கு ஏன் அமைச்சரவையில் இடம் கொடுக்கல..? கடுமையாக எழுந்த கண்டனக்குரல்.. சைலஜா டீச்சருக்கு ‘புதிய’ பதவி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

அவங்களுக்கு ஏன் அமைச்சரவையில் இடம் கொடுக்கல..? கடுமையாக எழுந்த கண்டனக்குரல்.. சைலஜா டீச்சருக்கு ‘புதிய’ பதவி..!

கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வென்றது. இதனால் பினராயி விஜயன் மீண்டும் முதல்வராவது உறுதியானது. இதனிடையே நடந்த கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் நாளை (20.05.2021) 21 மந்திரிகளுடன் பினராயி விஜயன் முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

KK Shailaja to be Chief Whip of Kerala Legislative Assembly

மேலும் இந்தமுறை அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும், கடந்த முறை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.சைலஜா டீச்சருக்கு மட்டும் மீண்டு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு காரணம் கடந்த மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கூட்டணி ஆட்சியில், முதல்வர் பினராயி விஜயனுக்கு அடுத்த படியாக மக்களிடம் அதிக செல்வாக்கு மிக்கவராக விளங்கியவர் கே.கே.சைலஜா டீச்சர் தான். மழை வெள்ளம், ஓகி புயல், நிஃபா வைரஸ், கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட காலங்களில் அவர் சிறப்பாக செயல்பட்டதாக சர்வதேச அளவில் கவனம் பெற்றார். இதனால் கே.கே.சைலஜா டீச்சர் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சராக வாய்ப்பு உள்ளது எனக் கூறப்பட்டது.

KK Shailaja to be Chief Whip of Kerala Legislative Assembly

இந்த நிலையில் கே.கே.சைலஜா டீச்சர் மீண்டும் அமைச்சாராக வாய்ப்பு இல்லை என நேற்று தகவல் வெளியானது. முதல்வர் பினராயி விஜயனைத் தவிர மற்ற அனைவரும் புதிய நபர்களாக நியமிக்க உள்ளதாக அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.

KK Shailaja to be Chief Whip of Kerala Legislative Assembly

இதனை அடுத்து பார்வதி, மாளவிகா மோகனன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட நடிகைகள், கேரள அமைச்சரைவில் கே.கே.சைலஜா டீச்சருக்கு இடம் கிடைக்காதது குறித்து கண்டனம் தெரிவித்தனர். மேலும் கே.கே.சைலாஜா டீச்சருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக விளக்கம் கொடுத்த கே.கே.சைலஜா டீச்சர், ‘கட்சி தலைமை கடந்த முறை என்னை அமைச்சராக நியமித்தது. என்னுடைய கடைமையை நான் சரியாக செய்தேன். அது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. அதற்காக நானே தொடர வேண்டும் என்பதில்லை. என்னைப் போலவே கட்சியில் அனைவரும் நன்றாக உழைக்கின்றனர். சிறப்பாக வேலைப்பார்க்க கூடிய பலர் இருக்கிறார்கள். அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும், என்பதால் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது. புதுமுகங்களுக்கு வாய்ப்பு என்கிற கட்சியின் முடிவை நான் வரவேற்கிறேன்’ என அவர் கூறியுள்ளார்.

KK Shailaja to be Chief Whip of Kerala Legislative Assembly

இந்த நிலையில் கேரள சட்டமன்ற கொறடாவாக கே.கே.சைலஜா டீச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த அவர், ‘அமைச்சர் பதிவிக்கு தகுதி உள்ள திறைமையான புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அமைய இருக்கும் புதிய அரசும் நல்ல பல மாற்றங்களை நிகழ்த்த உள்ளது’ என கே.கே.சைலஜா டீச்சர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்