'மூளையில் இருந்த ரத்த உறைவு!'.. ஆனாலும் மீண்டு வந்து.. சூர்யா, பாகுபலி நாயகிகளின் பயிற்சியாளராகி சாதித்த பெண்!.. இந்த வருடத்தின் வைரலான ஃபோட்டோஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை பூர்விகமாக கொண்டவர் 45 வயதான கிரண் டெம்ப்லா. பாடி பில்டர் சாம்பியனான இவர், உடற்பயிற்சி பயிற்சியாளராகவும் இருக்கிறார். இவரது முக்கிய வாடிக்கையாளர்களுள் சூர்யதமன்னா , அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் அடங்குவர்.
மிகச் சில பெண்களே ஐதராபாத்தில் சிக்ஸ் பேக் உடலைக் கொண்டவர்கள். அவர்களுள் ஒருவர் தான் கிரண் டெம்ப்லா இவர் ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடந்த உலக உடல் கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தியிருக்கிறார். இதுவரை 3 முறை எவரெஸ்ட் அடிப்படை முகாமுக்கு சென்று வந்த இவர், தமது 33 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்த போது, இவரது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது இவரது மூளையில் இரத்த உறைவு இருப்பது கண்டறியப்பட்டது. வாழ்க்கையே மாறிவிட்ட இந்த சம்பவத்தில் இருந்து மீண்டு இவர் செய்த சாதனைகள் பிரம்மிப்பூட்டுகின்றன.
இதுபற்றி பேசிய கிரண் டெம்ப்லா, “நானும் என் கணவரும் அதிர்ச்சி அடைந்தோம். கண்ணாடியைப் பார்த்து, கடந்த 10 வருடத்தில் நான் எப்படி மாறியிருக்கிறேன் என்று உணர்ந்தேன். அடுத்து என்ன செய்ய முடியும் என யோசித்தேன். சிகிச்சைக்கு பின் என் உடல் எடை கூடி, 75 கிலோ இருந்தேன். 2007-ல் நண்பர்களுடன் யோகா வகுப்புகளில், பின்னர் ஜிம்மில் பயிற்சி எடுக்க தொடங்கி, 6-7 மாதங்களில், 24 கிலோவை குறைத்து, நானும் ஒரு உடற்பயிற்சி பயிற்சியாளராக ஆக படித்து, 2008-ல் பேகம்பேட்டில் எனது சொந்த உடற்பயிற்சி கூடத்தை அமைத்தேன்.
நடிகர் ராம் சரணின் மனைவி உப்சனா கம்மினேனிக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கி, பாகுபாலிக்காக தமன்னா மற்றும் அனுஷ்கா ஷெட்டிக்கு பயிற்சி அளித்தேன். மெல்ல பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளராக அங்கீகாரம் கிடைத்தது. ராஜமவுலி, பிரகாஷ் ராஜ் மற்றும் என இன்னும் சிலரும் எனது வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இணையத்தில் அதிகம் வைரலான புகைப்படங்களுள் கிரண் டெம்ப்லா புகைப்படமும் ஒன்று. காரணம், ஆண்கள் மட்டும்தான் கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்டிருக்க வேண்டுமா என்ன?..என தடையை உடைத்தெறிந்து சோதனைகளை கிரண் டெம்ப்லா சாதனையாக மாற்றியதுதான்.
மற்ற செய்திகள்