"9 மாசத்துல 28 'States' பயணம்.." சோதனையை சாதனையா மாத்திய இளைஞர்.. "செலவு எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.."

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த 2020 ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், மக்கள் அனைவரையும் கடுமையாக அச்சுறுத்தி இருந்தது.

"9 மாசத்துல 28 'States' பயணம்.." சோதனையை சாதனையா மாத்திய இளைஞர்.. "செலவு எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.."

ஒரு பக்கம், ஏராளமானோர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழக்க, இன்னொரு பக்கம் வெளியே இறங்க முடியாமல், வேலை எதுவும் இல்லாமல் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர்.

இதன் காரணமாக, தங்களின் வருமானமும், குடும்ப சூழ்நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டு, பிழைப்புக்கான வழி எதுவும் இல்லாமல், இயல்பான வாழ்க்கையை வாழவே பாடு பட்டனர்.

அதிலும் குறிப்பாக, கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் பட்ட இழப்புகளை எல்லாம், ஏராளமான மக்கள் தற்போது தான் மெல்ல மெல்ல சரி செய்து வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் செய்துள்ள சம்பவம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

சாதனையாக மாற்ற முயற்சி

கேரள மாநிலம், கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷால் விஸ்வநாத் (வயது 32). இவர், ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக, இவரது தொழிலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் பகுதியில் வசித்து வரும் விஷால், தனக்கு வந்த சோதனையை சாதனையாக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

9 மாதங்களில் 28 மாநிலங்கள்

இதற்காக, கடந்த 9 மாதங்களுக்கு முன், இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார் விஷால். மொத்தம் 278 நாட்களில் (சுமார் 9 மாதங்கள்), 28 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஷால், இதற்காக எடுத்துக் கொண்ட மொத்த செலவு எவ்வளவு என கேட்டால், நிச்சயம் நீங்கள் அசந்து போவீர்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜூலை மாதம், தனது பயணத்தை தொடங்கிய விஷால், பெங்களூரில் இருந்து அசாமின் கவுகாத்தி நகருக்கு ரெயில் மூலம் சென்றுள்ளார்.

Kerala youth travels entire india in 9 months with 12000 rupees

லிப்ட் கேட்டு தான் பயணம்

பின்னர் அங்கிருந்து,  அருணாச்சலப்பிரதேசம், கொல்கத்தா, ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், புதுடெல்லி என அடுத்தடுத்து ஊருக்கு சென்று கொண்டே இருந்தார். அவர் பயணம் கொண்டது பெரும்பாலும், லிப்ட் கேட்டு தான். இன்னும் சில நேரங்களில் நடந்தே சென்றுள்ளார். மேலும், பல இடங்களில் கிராமத்தில் உள்ள மக்கள், விஷாலுக்கு உணவினை வழங்கி உள்ளனர். அவர் தங்கிக் கொள்ளவும், பல இடங்களில் மக்கள் இடம் கொடுத்தனர். சில நேரம், Tent அமைத்தோ அல்லது கிடைக்கும் இடங்களிலோ தூங்கிக் கொண்டுள்ளார் விஷால்.

Kerala youth travels entire india in 9 months with 12000 rupees

மொத்தமா 12,000 ரூபாய் தான்..

இப்படி அடுத்தடுத்து ஒவ்வொரு மாநிலமாக விசிட் அடித்த விஷால் விஸ்வநாத், கர்நாடகாவை அடைந்து, இறுதியில் தனது சொந்த ஊரான கேரளாவின் கண்ணூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஒன்பது மாதங்களில் இந்தியாவை சுற்ற, மொத்தம் அவர் எடுத்துக் கொண்ட செலவு, வெறும் 12,000 ரூபாய் தான்.

Kerala youth travels entire india in 9 months with 12000 rupees

இது தான் பெஸ்ட் அனுபவம்

சுமார் 9 மாதங்களில், 28 மாநிலங்கள் சுற்றிய விஷால் இது பற்றி கூறுகையில், "எனது வாழ்வில் எனக்கு கிடைத்த சிறந்த பரிசு இது தான். கொரோனா தொற்று மற்றும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட போது தான், குறைந்த செலவில் பல இடங்களில் பயணம் செய்யும் ஐடியா தோன்றியது. 32 வருடங்களில் எனக்கு கிடைத்த அனுபவத்தை விட, இந்த பயணம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது.

Kerala youth travels entire india in 9 months with 12000 rupees

நான் சென்ற இடங்கள், நான் சந்தித்த மக்கள், நான் ஏறிய மலைகள், நான் நடந்த சாலைகள், உண்ட உணவு  என அனைத்து தருணங்களும், என்னை வெவ்வேறு விதமான உணர்வுகளுக்கு அழைத்துச் சென்றது" என விஷால் விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

YOUTH, TRAVEL, 9 MONTHS, 278 DAYS, INDIA

மற்ற செய்திகள்