மலையில் தன்னந்தனியா சிக்கிய இளைஞர்.. 2 நாளா உணவு, தண்ணீர் சாப்பிடல.. பிரண்ட்ஸ் கூட ‘டிரெக்கிங்’ போனபோது நடந்த விபரீதம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநண்பர்களுடன் மலைக்கு ட்ரெக்கிங் சென்ற இளைஞர் மலை இடுக்கில் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்களுடன் மலையில் டிரெக்கிங்
கேரள மாநிலம் பாலாக்காடு அருகே மலப்புழா பகுதியிலுள்ள மலைக்கு சில தினங்களுக்கு முன்பு 3 கல்லூரி நண்பர்கள் ட்ரெக்கிங் சென்றுள்ளனர். மலை மீது ஏறிய பின்பு இரு இளைஞர்கள் பத்திரமாக கீழே இறங்கியுள்ளனர். அப்போது ஒரு இளைஞர் மட்டும் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து மலை இடுக்கில் சிக்கிக் கொண்டார்.
மலை இடுக்கில் சிக்கிய இளைஞர்
நீண்ட நேரமாக அங்கிருந்து கீழே இறங்க முடியாமல் தவிர்த்துள்ளார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் இளைஞரை மிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
மீட்பு பணி தீவிரம்
இதனை அடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் குன்னூரில் உள்ள ராணுவத்தினரும் இளைஞரை மீட்க ஹெலிகாப்டரில் வந்தனர். ஆனால் மலை இடுக்கில் அவர் சிக்கிக்கொண்டதால் ஹெலிகாப்டர் அங்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.
உணவு, தண்ணீர் சாப்பிடாமல் தவிப்பு
தற்போது 2 நாட்களாக சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் அந்த இளைஞர் மலை கிடைக்கு தவித்து வருகிறார். அதனால் இளைஞரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளைஞரை விரைவில் மீட்க இந்திய ராணுவத்தினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நண்பர்களுடன் டிரெக்கிங் சென்ற இளைஞர் மலை இடுக்கில் சிக்கி 2 நாட்களாக தவித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்