Kadaisi Vivasayi Others

VIDEO: 2 நாளா மலையில் சிக்கிய இளைஞர் மீட்பு.. பத்திரமா மேலே வந்ததும் அவர் செய்த செயல்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் மலை இடுக்கில் சிக்கி தவித்த இளைஞரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.

VIDEO: 2 நாளா மலையில் சிக்கிய இளைஞர் மீட்பு.. பத்திரமா மேலே வந்ததும் அவர் செய்த செயல்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

கேரளா

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (வயது28). இவர் தனது நண்பர்கள் இருவருடன் நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றுள்ளனர். மதியம் பாபு மலையில் இருந்து இறங்கியபோது, பள்ளமான இடத்தில் மலை இடுக்குகளுக்குள் தவறி விழுந்துள்ளார். அவருடன் சென்ற நண்பர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.

டிரெக்கிங்

இதனைத் தொடர்ந்து அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்றனர். ஆனால் பாபு சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை. இதனால் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடங்கியது. நீண்ட நேரத்திற்கு பின் இளைஞர் பாபு சிக்கியுள்ள இடம் கண்டு பிடிக்கப்பட்டது.

ஹெலிகாப்டர்

இந்த நிலையில், மலை இடுக்கில் சிக்கிய இளைஞரை ஹெலிகாப்டர் மூலம் மீட்க மேற்கொண்ட போது முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து இந்திய ராணுவத்தின் உதவியை கேரள அரசு நாடியது.

இந்திய ராணுவம்

இதனை அடுத்து வெலிங்டன், பெங்களூரில் இருந்து வந்த மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக மலை இடுக்கில் 43 மணி நேரமாக சிக்கி உள்ள பாபுவை நெருங்கிய ராணுவ வீரர்கள் அவருக்கு தெம்பு அளிக்கும் வகையில் உணவு, தண்ணீர் வழங்கினர். இதனைத் தொடர்ந்து அவரை கீழே கொண்டும் பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

முத்த மழை

சுமார் 43 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி இந்திய ராணுவ வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டனர். தன்னை மீட்ட ராணுவ வீரர்களுக்கு முத்த மழை பொழிந்து இளைஞர் பாபு நன்றி தெரிவித்தார். மேலும் மலையில் சிக்கிய இளைஞரை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு கேரள முதல்வர் பிரனாயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

KERALA, YOUTH, HILLS, TREKKING

மற்ற செய்திகள்