'பலரது இதயங்களை நொறுக்கிய ஒற்றை புகைப்படம்'... 'இனிமேல் இந்த கொடுமை நடக்க கூடாது'... கேரள இளம்பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் நிகழ்ந்த மரணம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

'பலரது இதயங்களை நொறுக்கிய ஒற்றை புகைப்படம்'... 'இனிமேல் இந்த கொடுமை நடக்க கூடாது'... கேரள இளம்பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!

கேரளாவில் அடுத்தடுத்து இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமை புகாரில் உயிரிழந்த சம்பங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது விஸ்மயா வி நாயர்  என்ற பெண், சமீபத்தில் தனது கணவர் கிரண்குமார்  வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விஸ்மயாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

Kerala women starts no to dowry post goes viral in Twitter

அவரது மரணம்  சமூக ஊடகங்களில் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. விஸ்வமயா ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவி ஆவார். இதையடுத்து  விஸ்மயாவை  அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜூன் 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

Kerala women starts no to dowry post goes viral in Twitter

மேலும் விஸ்மயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவினருக்கு விஸ்மயா காயமடைந்த படங்களை அனுப்பியதாகத் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், விஸ்மயா  பெற்றோர் விஸ்மயா மரணத்திற்கு கிரண் குமார்  குடும்பத்தினரும் காரணம் எனக் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

Kerala women starts no to dowry post goes viral in Twitter

இதற்கிடையே கேரளாவில் வரதட்சணை தொடர்பாக அடுத்தடுத்து நிகழும் கொடூரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனிமேல் வரதட்சணை கொடுக்க மாட்டோம் எனக் கேரள இளம்பெண்கள் பலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக எழுதப்பட்ட பதாகைகளுடன் அவர்கள் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிகழ்வு சமூகவலைத்தளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

மற்ற செய்திகள்