ஸ்கூட்டியில் வந்த பெண்.. திடீரென வழிமறித்து ‘தாய் மாமா’ செய்த அதிர்ச்சி காரியம்.. பரபரப்பு வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஸ்கூட்டியில் வந்த பெண்ணுக்கு தாய் மாமாவால் நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கூட்டியில் வந்த பெண்.. திடீரென வழிமறித்து ‘தாய் மாமா’ செய்த அதிர்ச்சி காரியம்.. பரபரப்பு வாக்குமூலம்..!

Also Read | “பாதி சீசன் முடிஞ்சிருச்சு”.. தோனி மீண்டும் CSK கேப்டனானது பற்றி டு பிளசிஸ் என்ன சொன்னார்..?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா பகுதியை சேர்ந்தவர் ஷாலு (வயது 37). இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அதனால் தனது 2 மகன்களுடன் ஷாலி கேரளாவில் வசித்து வந்துள்ளார். ஷாலு அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த சூழலில் சம்பவத்தன்று நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு சாப்பிடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் ஷாலு வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென ஷாலுவின் தாய் மாமா அணில் (வயது 46), அவரது இருசக்கர வாகனத்தை வழி மறித்துள்ளார்.

இதனை அடுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், ஷாலுவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதைப் பார்த்து பொதுமக்கள் ஓடி வருவதைப் பார்த்த அவர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த ஷாலுவை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஷாலு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாய் மாமா அணிலை கைது செய்தனர். இதனை அடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் ஷாலுவை தன்னுடைய ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஷாலு மறுக்கவே, அவரை அரிவாளால் தாக்கியதாக அணில் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தாய் மாமா அணிலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

KERALA, WOMAN, DEATH, UNCLE, பெண், தாய் மாமா, கேரள மாநிலம்

மற்ற செய்திகள்