'துணி' துவைத்து கொண்டிருந்த 'பெண்'... நின்று கொண்டிருந்த இடத்தில் திடீரென உருவான 'குழி'... அடுத்தடுத்து காத்திருந்த 'அதிர்ச்சி'... பரபரப்பு 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை அடுத்த இரிக்கூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் உபைமா. 46 வயதான அந்த பெண்மணி, தனது வீட்டிற்கு பின்னுள்ள பகுதியில் துணி துவைத்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது, திடீரென உபைமா நின்று கொண்டிருந்த நிலப்பகுதி குழியாக மாற அவர் அதற்குள் விழுந்து விட்டார். உடனடியாக, உபைமாவின் கூச்சல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் அங்கே கூடிய போது நிலத்தில் குழி ஒன்று உருவாகி இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.
அதன் பின்னர், அந்த குழி உண்டான பகுதியில் இருந்து சுமார் 10 மீட்டர் தொலைவிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து உபைமா கூச்சலிடும் சத்தம் கேட்டுள்ளது. அதன் ஆழம் சுமார் 35 அடி ஆகும். இதுகுறித்து, தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட நிலையில், அவருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டிருந்தது. பாதிப்புகள் அதிகம் இல்லாத போதும் கடுமையான அதிர்ச்சியில் இருந்து உபைமாவால் மீள முடியவில்லை. எனவே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் அந்த குழிக்குள் விழுந்து விட்டதும் நேரடியாக கிணற்றுப் பகுதிக்கு சென்றதால் அவரை எளிதாக மீட்க முடிந்தது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாறாக, கிணற்றிற்கு செல்லாமல் அந்த குழியிலே உபைமா சிக்கியிருந்தால் அவரை மீட்பதற்கு கடினமாகி இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அப்பகுதியில் இது போன்ற குழி ஏற்படுவதாக தெரிவித்த அங்குள்ள மக்கள், கிணற்றில் குகை போன்ற அமைப்பு ஒன்று உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர். ஈரப்பதத்துடன் அடிக்கடி அப்பகுதி இருப்பதால் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இதற்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள புவியியல் வல்லுநர்கள் அங்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மற்ற செய்திகள்