2-வது மாடியில கெடந்த 'பாம்பு'... அம்மாவை இழந்த '1 வயது' குழந்தை... கடைசியா 'அவரு' தான் வந்தாரு... அவிழுமா மர்மமுடிச்சு?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

முதல்முறை பிழைத்த உத்ராவை 2-வது முறையாக கடித்த பாம்பு உயிரை பறித்து விட்டது.

2-வது மாடியில கெடந்த 'பாம்பு'... அம்மாவை இழந்த '1 வயது' குழந்தை... கடைசியா 'அவரு' தான் வந்தாரு... அவிழுமா மர்மமுடிச்சு?

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்த உத்ரா(25) என்பவருக்கும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த மாதம் கணவருடன் தூங்கிக்கொண்டு இருந்த உத்ரா காலில் ஏதோ கடித்து விட்டதாக அலறி இருக்கிறார். இதையடுத்து அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உத்ராவை பாம்பு கடித்து விட்டதாக கூறி அவருக்கு 16 நாட்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனாலும் மீண்டும் சிகிச்சை தேவைப்பட்டதால் உத்ரா தன்னுடைய தாய் வீட்டிலேயே தங்கி இருந்தார். இதற்கிடையில் கடந்த 6-ம் தேதி மீண்டும் பாம்பு கடித்து உத்ரா இறந்து விட்டார். இது கேரளா முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் உத்ராவின் உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கின்றனர். இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், ''உத்ரா இருந்தது இரண்டாவது மாடியில் உள்ள ஏ.சி அறை. அந்த அறையில் கதவு முதற்கொண்டு எதுவும் திறக்கப்படவில்லை. உத்ரா இறப்பதற்கு முன் அவரது கணவர் சூரஜ் அங்கு வந்தார். இருவரும் ஒரே அறையில் தான் படுத்திருந்தனர். ஆனால் காலையில் 5 மணிக்கு மேல் சூரஜ் எழுந்து சென்று விட்டார். தொடர்ந்து உத்ராவின் அம்மா வந்து பார்த்தபோது உத்ரா எந்த அசைவுமின்றி கிடந்துள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது காலில் பாம்பு கடித்ததற்கான அடையாளம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் சென்று பார்த்தபோது டிரெஸ்ஸிங் ரூமில் மூர்க்கன் வகை பாம்பு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உத்ரா இறந்துவிட்டது தெரிந்ததும் அங்கிருந்த சூரஜ் நடந்துகொண்ட விதம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கணவன் வீட்டில் வைத்து முதன்முறை பாம்பு கடிப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பே படுக்கை அறை அருகில் உத்ரா ஒரு பாம்பை பார்த்துள்ளார். உத்ரா சத்தம் போட்டு அலறியதைத் தொடர்ந்து அங்கு வந்த சூரஜ், பாம்பை வெறும் கைகளால் பிடித்து சாக்குப் பையில் போட்டு எடுத்துச்சென்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தை உத்ரா ஏற்கெனவே கூறியிருந்தார். திருமணத்தின்போது 100 பவுன் நகைகள், ஐந்து லட்சம் ரூபாய், கார், நிலம் ஆகியவை சீதனமாகக் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் சூரஜ் வரதட்சணை கேட்டு, மனதளவில் உத்ராவுக்கு டார்ச்சர் கொடுத்திருக்கிறார். இதனால் திட்டமிட்டு சூரஜ் இந்தச் சம்பவத்தை நடத்தியிருக்கலாம்" என்றனர். ஏற்கெனவே, வெறும் கையால் பாம்பை பிடித்த சூரஜ், பாம்புகளை கையாளும் வித்தை படித்திருக்கலாம் என்ற சந்தேகத்தை உறவினர்கள் எழுப்பியுள்ளனர். போலீஸ் விசாரணையில் இந்த வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழும்,'' என தெரிவித்து இருக்கின்றனர்.

மற்ற செய்திகள்