"2,3 மூணு நாளா யாரையும் காணோம்".. வீட்டை சுற்றி வந்த துர்நாற்றம்.. "பிளாஸ்டிக் பைக்குள்ள".. குலை நடுங்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகணவன் மனைவி என கூறி இருவர் தங்கி இருந்த வீட்டில் போலீசார் கண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம், கொச்சி பகுதியை அடுத்து கடவந்தரா என்னும் இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருந்த வாடகை வீடு ஒன்றில் வட மாநிலத்தை சேர்ந்த தம்பதியர் வாழ்ந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனிடையே அந்த வீட்டை சுற்றி கடந்த சில தினங்களாக துர்நாற்றம் வீசி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனால் சந்தேகத்தின் பெயரில் போலீசாருக்கும் அந்த வீட்டின் உரிமையாளர் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக அங்கே வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி, ஒரு நிமிடம் நடுங்க வைத்துள்ளது. அந்த வீட்டில் வசித்து வந்த பெண்ணின் உடல், பிளாஸ்டிக் கவர் மற்றும் படுக்கை துணி உள்ளிட்டவற்றில் வைக்கப்பட்டு அங்குள்ள படுக்கை அறையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த அறை வெளியே இருந்து பூட்டப்பட்டிருந்த நிலையில் அதன் பூட்டை உடைத்து உள்ளே சென்று அந்த பெண்ணின் உடலை போலீசார் மீட்டு எடுத்தனர். மேலும் அந்த பெண் உயிரிழந்ததற்கான காரணம் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட தகவலின் படி கடந்த ஒன்றறரை ஆண்டுகளுக்கு முன்பாக இந்த ஜோடி கேரள மாநிலத்தில் வந்து தங்கி பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தங்களை அந்த வீட்டின் உரிமையாளரிடமும் அவர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.
தங்களை குறித்து ஐடி அட்டை எதையும் அந்த உரிமையாளரிடம் காண்பிக்காததால் அவரின் பெயர் மற்றும் முகவரி குறித்த விவரத்தில் உள்ள உண்மைத் தன்மை எந்த அளவுக்கு உள்ளது என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இதனால் இன்னும் தீவிர விசாரணை நடந்த பின்பு அவர்கள் குறித்து உண்மையான தகவல் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு தினங்களாக அந்த தம்பதியினரை அப்பகுதி மக்கள் யாரும் வெளியே பார்க்கவில்லை என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அந்த பெண் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதற்கான விவரம் தெரிய வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பெண்ணின் கணவர் என அறியப்பட்டவரும் சில தினங்களாக காணவில்லை என்பதால் அவர் மீது போலீசாரின் சந்தேகமும் வலுத்துள்ளது. சிசிடிவி உள்ளிட்ட ஆதாரங்களை கொண்டு அவர் எங்கே சென்றார் என்பதையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மற்ற செய்திகள்