அமெரிக்காவில் இருந்து ஆசையாய் வந்த கணவர்.. கேட்டையே திறக்காத மனைவி, பிள்ளைகள்.. இதுவரை நடந்ததுலயே கொரோனா பயத்தின் உச்சம் இதுதான்.. கடைசியில் கணவர் எடுத்த முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாமதுரையைச் சேர்ந்தவர் பாஸ்கரன். கேரள மாநிலம் அருகே இருக்கும் வெள்ளி மலை வாழவில்லை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இவருக்கும் திருவோணம் ஆகிய நிலையில் இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.
அமெரிக்காவில் பணியாற்றி வரும் பாஸ்கரன் தனது குடும்பத்தினரை கேரளாவில் அமர்த்திவிட்டு வேலை பார்த்து வந்தார். பல கட்ட சிரமங்களுக்கு பிறகு தனது குடும்பத்தினரை காண்பதற்காக ஆசையாக இந்தியா வந்து கேரளாவுக்கு சென்றுள்ளார். அப்போது மனைவியின் வீட்டு வாசலில் நின்று கொண்டு மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்து வீட்டின் கதவை திறக்க சொல்லி கேட்கிறார். ஆனால் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வாசலைக் கூட திறக்காமல் வீட்டுக்குள் அவரை விடாமலும் இருந்துள்ளனர்.
இதனால் லக்கேஜ்களுடன் வெளியே பல மணி நேரம் நின்றும் உட்கார்ந்தும் பார்த்துள்ளார் பாஸ்கரன். இதனிடையே வீட்டிற்குள் அனுமதிக்கும்படி கெஞ்சியும் கேட்டுள்ளார். ஆனா கொரொனா அச்சத்தால் கணவரை வீட்டிற்குள் அனுமதிப்பதற்கு அவரது மனைவிக்கு தயக்கம் இருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ராஜேஷ், பாஸ்கரனின் மனைவியிடம் கணவரை வீட்டுக்குள் அனுமதிக்குமாறு கூறி சமரசம் செய்ய முன்வந்தார். ஆனாலும் விடாப்பிடியாக இருந்த மனைவி கணவரை வீட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
இதனால் வேறு வழியின்றி தனது சொந்த ஊரான மதுரைக்கு செல்லவிருப்பதாக கூறிய பாஸ்கரன் மனைவியிடம் தனது காரை கேட்டிருக்கிறார். ஆனால் அவரது மனைவிக்கு அந்த காரை கொடுப்பதற்கும் மனமில்லை. இதனை அடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரும் ஒன்றுகூடி பாஸ்கரின் மனைவியிடம் வாக்குவாதம் செய்து காரையாவது அவரிடம் கொடுத்து அனுப்புங்கள் என்று சத்தம் போட அதற்கு செவி கொடுக்காத மனைவி, காரையும் கொடுக்காமல் வீட்டையும் திறக்காமல் மௌனம் சாதித்துள்ளார்.
இதனால் வேறு வழியின்றி வீட்டு கேட்டை உடைத்து மெக்கானிக் உதவியுடன் பாஸ்கரனின் காரை பக்கத்து வீட்டுக்காரர்கள் வெளியே எடுத்து கொடுத்தனர்.
அந்த காரை எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்றுள்ளார் பாஸ்கரன். மனைவி, பிள்ளைகளே கூட அமெரிக்காவிலிருந்து வந்த பாஸ்கரனை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ள இந்த சம்பவம், எந்த அளவுக்கு கொரோனா அச்சம் தலைவிரித்து ஆடுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
மற்ற செய்திகள்