'எனக்கு வந்த திருமண வரனை தடுத்தது அந்த ஆளு தான்'... 'பக்கத்து வீட்டுகாரர் மீது செம காண்டான 90ஸ் கிட்'... ஆத்திரத்தில் செய்த பகீர் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனக்கு வந்த 5 திருமண வரன்களைப் பக்கத்து வீட்டுக்காரர் தடுத்து விட்டார் என்ற ஆத்திரத்திலிருந்த இளைஞர் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பின் மேத்தியூ. 30 வயதான அந்த இளைஞர் பதிவிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோவே அவருக்குச் சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஜேசிபி வாகனத்தின் முன்பு நின்று பேசும் அந்த இளைஞர், ''இங்கு இருக்கும் பல சரக்கு கடையில் கடந்த 30 வருடங்களாகத் திருட்டுத் தனமாக மது விற்கப்பட்டு வருகிறது. அதோடு சட்டத்திற்குப் புறம்பான பல நடவடிக்கைகளும் இந்த கடையில் நடைபெற்று வருகிறது.
புகையிலை, குட்கா போன்ற பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த கடையில் சூதாட்டமும் நடைபெற்று வருகிறது. இந்த கடையில் உரிமையாளர் மீது 2 போக்ஸோ வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து பல முறை நான் அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறிய அந்த இளைஞர், இறுதியாகக் கூறியது தான் தற்போது பரபரப்புக்கு முக்கிய காரணம்.
கடை உரிமையாளர் சோஜி எனது பக்கத்து வீட்டுக்காரர். இவர் எனக்கு வந்த 5 திருமண வரன்களை தடுத்துள்ளார். இதனால் எனக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை எனக் கூறிக்கொண்டு, வேக வேகமாக ஜேசிபி வாகனத்தில் ஏறி அந்த கடையை இடித்து தரைமட்டமாக்கினார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட நிலையில், அது பெரும் வைரலானது. இதையடுத்து ஆல்பின் செய்த செயலுக்காக அவரை கைது செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்ற செய்திகள்