ஆற்றில் மிதந்து வந்த பெட்டிகள்.. "உள்ள கட்டுகட்டா 500 ரூபாய் நோட்டு இருந்துச்சா??".. பரபரப்பை உண்டு பண்ணிய சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆற்றில் மிதந்து வந்த பெட்டி ஒன்றை திறந்து பார்த்த நபருக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள ஆறு ஒன்றில் நபர் ஒருவர் குளித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அந்த சமயத்தில் ஆற்று நீரில், இரண்டு பெட்டிகள் மிதந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டதும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நபர், ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்.
மேலும், அந்த ஆற்றின் கரை அருகே இருந்த பொது மக்கள் மத்தியிலும் இந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது என்ன பெட்டி என அவர்கள் மத்தியில் குழப்பமும் கேள்விகளும் உருவான நிலையில், தொடர்ந்து ஆற்றில் நின்று கொண்டிருந்த அந்த நபர், அதன் அருகே சென்று அதனை திறக்க முற்பட்டுள்ளார்.
இதன் பின்னர், அந்த பெட்டிகளில் ஒன்றை திறந்து பார்த்த போது அதற்குள் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார். அவற்றை வெளியே எடுத்து பார்த்த போது தான், உண்மை என்ன என்பது தெரிய வந்துள்ளது. அவை அனைத்தும் போலி ரூபாய் நோட்டுகள் என்பதும், ஏதோ படப்பிடிப்பிற்காக அச்சடிக்கப்பட்டவை என்பது தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடம் வந்த போலீசார் அந்த இரண்டு போலி ரூபாய் அடங்கிய பெட்டிகளை கைப்பற்றி இது தொடர்பாக விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
திருவனந்தபுரம் பகுதியில் உள்ள ஆற்றில் இரண்டு பெட்டிகள் மிதந்து வருவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.
Also Read | 52 வருசத்துல.. லாட்டரிக்கு செலவு செஞ்சது மட்டும் 3.5 கோடி ரூபா.. "ஆனா கெடச்ச பரிசு எவ்ளோ தெரியுமா?"
மற்ற செய்திகள்