குழந்தை பெற்றெடுத்த கணவர்.. மகிழ்ச்சியில் மனைவி.. “இயற்கை கொடுத்த வரம்“ - மாற்றுப் பாலின தம்பதி நெகிழ்ச்சி.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலம், கோழிக்கோடிலுள்ள உம்மலத்தூர் என்னும் பகுதியை சேர்ந்த தம்பதி சஹத் - ஜியா ஆகியோர். மூன்றாம் பாலின தம்பதிகளான இவர்கள் உள்ளனர்.

குழந்தை பெற்றெடுத்த கணவர்.. மகிழ்ச்சியில் மனைவி.. “இயற்கை கொடுத்த வரம்“ - மாற்றுப் பாலின தம்பதி நெகிழ்ச்சி.!

                                      Images are subject to © copyright to their respective owners

இதில் சஹத் பெண்ணாக பிறந்து ஆணாக மாறினார். அதே போல, ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர் ஜியா.

முன்னதாக, சஹத் மற்றும் ஜியா ஆகிய இருவரும் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் விரும்பி உள்ளனர். மேலும் ஆரம்பத்தில் குழந்தை ஒன்றையும் அவர்கள் தத்தெடுக்க முடிவு செய்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அதன் பின்னர் தங்கள் மூலமாக குழந்தையை பெற்றுக் கொள்ள முடியுமா என்பதையும் மருத்துவர்களிடம் கேட்டு ஆலோசித்தனர்.

அவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய சஹத் தாயாகவும், ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஜியா தந்தையாகவும் முடியும் என்றும் கூறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னதாக, பாலின மாற்று அறுவை சிகிச்சையின் போது சஹத்தின் கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் அகற்றப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றது. இதனைத் தொடர்ந்து கருவுற்ற சஹத் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்கள் அதிகம் வைரலாகி இருந்தது.

இந்த நிலையில் ஜியா மூலம் கருவுற்ற சஹத், தற்போது குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்துள்ளார். மார்ச் மாத ஆரம்பத்தில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்த சூழலில் சில தினங்கள் முன்பே மூன்றாம் பாலின தம்பதியான சஹத் மற்றும் ஜியா ஆகியோர் குழந்தையை பெற்றுள்ளனர். தற்போது குழந்தையும் சஹத்தும் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Kerala transman gives birth to baby first in india

Images are subject to © copyright to their respective owners

இது தொடர்பாக ஜியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து குழந்தையின் கை தெரியும் வகையில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள சூழலில், குழந்தையின் பாலினத்தை தற்போது வெளியிட வேண்டாம் என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்தியாவில் குழந்தையை பெற்றெடுத்த முதல் மூன்றாம் பாலின தம்பதியாகவும் இவர்கள் உருவெடுத்துள்ள சூழலில், நாடு முழுவதும் இந்த விஷயம் பரவலாக பேசப்பட்டு வருவதுடன் பல தரப்பு மக்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

TRANS COUPLE, BABY

மற்ற செய்திகள்