எங்க கல்யாணத்தை இப்படிதான் ‘பதிவு’ பண்ண போறோம்.. காதலர் தினத்தில் கைகோர்த்த ஜோடி எடுத்த முடிவு.. குவியும் வாழ்த்து..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்ட திருநங்கை-திருநம்பி ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எங்க கல்யாணத்தை இப்படிதான் ‘பதிவு’ பண்ண போறோம்.. காதலர் தினத்தில் கைகோர்த்த ஜோடி எடுத்த முடிவு.. குவியும் வாழ்த்து..!

கல்யாணம் ஆனவங்கன்னா 1 தான்.. பேச்சுலர்னா 2 இலவசம்.. வித்தியாசமாக யோசித்த மாப்பிள்ளை வீட்டார்.. கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க..!

கேரளா

கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்டவர் திருநம்பி மனு கார்த்திகா (வயது 31). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக உள்ளார். அதுபோல் கேரள அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டுப் பிரிவில் திட்ட அதிகாரியாக இருப்பவர் திருநங்கை சியாமா எஸ் பிரபா (வயது 31).

திருநங்கை-திருநம்பி

இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், காதலர் தினமான நேற்று திருவனந்தபுரத்தின் இடுப்பாஞ்சியில் உள்ள அழகாபுரியில் வைத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இந்த திருமணத்துக்கு உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

காதலர் தினம்

திருமணம் முடிந்த பின் பேசிய சியாமா எஸ் பிரபா, ‘காதலர் தினத்தன்று திருமணம் செய்ய நாங்கள் எந்த முடிவும் செய்யவில்லை. எங்களது பெற்றோர்கள் ஜாதகம் பார்த்து இந்த நாளை முடிவு செய்தனர். எல்லா விதமான காதலையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Kerala trans couple Syama, Manu Karthika ties knot on Valentines day

கல்யாணம்

இந்த ஜோடி திருநங்கை, திருநம்பி என்னும் அடையாளத்துடனேயே தங்கள் திருமணத்தை பதிவு செய்ய முயன்று வருகிறது. திருநங்கைகள் உரிமை சட்டம் 2014 மற்றும் திருநங்கைகள் உரிமை பாதுகாப்புச் சட்டம் 2019 ஆகியவை மூலம் இப்படிச் செய்வதற்கான உரிமையை வழங்குகிறது.

சட்டப் போராட்டம்

இந்த செயலை செய்தால் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களை திருமண பந்தத்திலும் துணிச்சலுடன் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் சூழல் உருவாகும் என நம்புவதாக இருவரும் முன்னாதாக தெரிவித்திருந்தனர். இதற்கான சட்டப் போராட்டத்திற்கு இருவரும் தயாராகி வருகின்றனர். விரைவில் இதுதொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்ய உள்ளதாக தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

என்னது ஹார்ட்டின் எமோஜி அனுப்புனா 5 வருசம் ஜெயில் தண்டனையா?.. காதலர் தினத்தில் வந்த ‘ஷாக்’ நியூஸ்.. எங்க தெரியுமா..?

KERALA, TRANS COUPLE, TIES KNOT, VALENTINES DAY, கேரளா, திருநங்கை-திருநம்பி, காதலர் தினம்

மற்ற செய்திகள்