VIDEO: 'கேரளா பேமஸ் சாய் ஸ்வேதா டீச்சர்...' 'நோ..., நான் படம்லாம் நடிக்க மாட்டேன்...' வாய்ப்பை மறுத்ததால் வக்கீல் செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளா அரசு ஆசிரியர் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய வழக்கறிஞர் மீது மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மேப்பையூர் பகுதியை சேர்ந்த ஆசிரியான சாய் ஸ்வேதா, ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுத்து வருகிறார்.
இவரின் கற்பித்தல் முறை, படங்களை வைத்து கொண்டு காட்டும் பாவனைகள் எல்லாம் குழந்தைகளை மட்டுமல்லாமல் அனைத்து வயதினரையும் ரசிக்க வைத்துள்ளது. ஆசிரியர் சாய் ஸ்வேதாவின் சில கற்பித்தல் வீடியோக்கள் ஒரே மாதத்தில் 30 லட்சம் முறைக்கும் மேலாக பார்க்கப்பட்டு இணையத்தில் வைரலாகியது.
இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர் சாய் ஸ்வேதாவை குறித்து அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியுள்ளார் ஸ்ரீஜித் என்ற வழக்கறிஞர்.
இதுகுறித்த விசாரணையில் வழக்கறிஞர் ஸ்ரீஜித் ஆசிரியர் ஸ்வேதாவின் வீடியோக்களை கண்டு அவரின் நண்பர் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார். ஆனால் நடிக்க விருப்பம் இல்லாத ஆசிரியர் ஸ்வேதா கல்வி சேவையே தனது விருப்பம் என்று உறுதிப்பட தெரிவித்த படவாய்ப்பை மறுத்துள்ளார். இதனால் வழக்கறிஞர் ஸ்ரீஜித் ஆசிரியர் ஸ்வேதாவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பரப்பியுள்ளார்.
மேலும் தன்னுடைய ஆசிரியர் வேலையை சிறப்பாகவும், எந்தவித குறைபாடும் இன்றி நடத்தி வந்த ஆசிரியருக்கு ஏற்பட்ட இந்த சம்பவம் கேரளா முழுவதும் வைரலாகியது. மேலும் அரசு பள்ளி ஆசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பிய குற்றச்சாட்டுக்கு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக கேரள மகளிர் ஆணையம் இது குறித்து வழக்கு பதிவு செய்து, அவதூறு பரப்பியவர் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கோழிக்கோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
மற்ற செய்திகள்