‘திருமணமான 4 மாதத்தில் குழந்தை..’ ஆசிரியையைப் பணியில் சேர்க்க மறுக்கும் பள்ளி..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பேறுகால விடுப்புக்குச் சென்ற தன்னை பள்ளியில் மீண்டும் சேர்க்க நிர்வாகம் மறுப்பதாக ஆசிரியை ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

‘திருமணமான 4 மாதத்தில் குழந்தை..’ ஆசிரியையைப் பணியில் சேர்க்க மறுக்கும் பள்ளி..

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “பேறுகால விடுப்புக்குச் சென்ற என்னை மீண்டும் பணியில் சேர்க்க பள்ளி நிர்வாகம் மறுக்கிறது. மேலும் பெற்றோர் ஆசிரியர் மீட்டிங்கிலும் என்னை அவதூறாகப் பேசி அவமானப்படுத்தினார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.

புகார் கொடுத்த ஆசிரியை அந்தப் பள்ளியில் 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமான அவர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். அதேவேளையில் இரண்டாவது திருமணத்திற்குத் தயாராகி வந்துள்ளார். விவாகரத்து கிடைத்ததும் மீண்டும் திருமணம் செய்த அவர் பேறுகால விடுப்புக்குச் சென்று பள்ளிக்குத் திரும்பியுள்ளார். அப்போது பள்ளி நிர்வாகம் அவரை பணியில் சேர்க்க மறுத்துள்ளது.

இரண்டாவது திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடைந்த அவர்  நான்கே மாதத்தில் மகப்பேறு விடுப்பு கோரியுள்ளார். பள்ளி சார்பில் அவரை மீண்டும் பணியில் சேர்க்காததற்கு இதுவே காரணமாகக் கூறப்படுகிறது. இதற்கு தகுந்த விளக்கம் கூறியும் பணியில் சேர விடாமல் தடுப்பதாக அந்த ஆசிரியை தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி அவர் குழந்தைகள் நல ஆணையத்திலும் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

TEACHER, MATERNITYLEAVE