கேரளால 'இந்த தம்பதிய' தெரியாத ஆளே கிடையாது...! 'அதுக்கு காரணம் என்னன்னா...' - 'இதெல்லாம்' வாழ்க்கையில கத்துக்க வேண்டிய ஒண்ணு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் டீக்கடை நடத்தி வரும் கே.ஆர்.விஜயன், மோஹனா தம்பதிகளை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.
நாமெல்லாம் ஒரு முறை சுற்றுலா பயணம் மேற்கொள்ள பிளான் செய்தால் 10 ஆண்டுகள் கழித்தும் அந்த சுற்றுலா பிளான் அப்படியே இருக்கும். இங்கிருக்கும் கோவா செல்ல வேண்டும் என்றால் கூட 20 ஆண்டுகள் ஆகிவிடும்.
ஆனால், இந்த தம்பதிகளோ இதுவரை தங்கள் வாழ்நாளில் 25 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களின் இந்த பயணமே இந்திய அளவில் அவர்களை பிரபலமாக்கியது.
ஒரு வருடத்தில் 11 மாதங்கள் அயராது கடுமையாக உழைக்கும் இந்த தம்பதிகள் அன்றாட செலவு போக மீதியுள்ள காசை சேமித்து வெளிநாட்டுக்குச் சென்று வருகின்றனர்.
கொரோனா காரணமாக 2020-ஆம் ஆண்டு செல்ல வேண்டிய பயணம் தடைப்பட இப்போது மீண்டும் தங்கள் வெளிநாட்டு பயணத்தை தொடங்கியுள்ளனர் கே.ஆர்.விஜயன், மோஹனா தம்பதிகள்.
தற்போது விஜயன்-மோஹனா தம்பதி இம்மாதம் ரஷ்யா செல்கின்றனர். அக்டோபர் 21-தேதி ரஷ்யாவை அடையும் நிலையில் அங்கு அக்டோபர் 28 வரை தங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கூறிய மோகனா, 'எங்களின் அதிகபட்ச ஆசையே உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் செல்ல வேண்டும் என்பது தான். அதில் ரஷ்யாவைப் பார்க்க வேண்டுமென்பது நீண்ட நாள் கனவு.
எங்களின் இந்த கனவிற்கு கொரோனா ஒரு முட்டுக்கட்டையாக அமைந்து விட்டது ஆனால், இப்போது நாங்கள் ரஷ்யா செல்லவிருப்பது எங்களுக்கு சந்தோசமாக இருக்கிறது' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்