"ஆத்தா, நான் பாஸ் ஆயிட்டேன்.." தனக்குத் தானே கட் அவுட்.. ஏரியா முழுக்க வைரலான மாணவன்.. சுவாரஸ்ய பின்னணி

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒருவரின் பள்ளிக் காலத்தை எடுத்துக் கொண்டால், பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.

"ஆத்தா, நான் பாஸ் ஆயிட்டேன்.." தனக்குத் தானே கட் அவுட்.. ஏரியா முழுக்க வைரலான மாணவன்.. சுவாரஸ்ய பின்னணி

Also Read | "ஆத்தி, இது எப்படி இங்க.." நாற்காலி ஓட்டைக்குள் கேட்ட சத்தம்.. "லைட் அடிச்சு பாத்ததுல.." நடுங்கி போன நெட்டிசன்கள்

இந்த பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் மேற் படிப்புகள் செல்ல உதவும் என்பதால், மாணவர்கள் அனைவரும் இந்த இரண்டு பொதுத் தேர்வுகளுக்காக மிகவும் கடினமாக உழைத்து, நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைவதற்காக உழைப்பார்கள்.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்ததன் பெயரில் செய்த சம்பவம் ஒன்று, இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

தனக்குத் தானே பேனர்

பொதுவாக, பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் சில இடங்களைப் பிடிக்கும் மாணவ மாணவிகளின் புகைப்படங்களையோ அல்லது மாநில அளவில், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவ மாணவிகளின் புகைப்படங்களையோ, பள்ளியைச் சுற்றியும், பொது இடங்களிலும் பேனர்களாக வைப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவரான ஜிஷ்ணு, பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்காக தனக்குத் தானே ஃப்ளக்ஸ் மற்றும் பேனர்களை தனது வீட்டைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் வைத்துள்ளார்.

Kerala tenth student places banner for himself after passing public ex

"வரலாறு வழி விடும்.."

ஜிஷ்ணு வைத்திருந்த பேனரில், கூலிங் கிளாஸ் அணிந்த படி ஜிஷ்ணுவும் இருக்க, அதன் மேலே "சிலர் வரும் போது வரலாறு வழிவிடும்" என மலையாளத்தில் கேப்ஷன் ஒன்றையும் குறிப்பிட்டு, தனக்கு தானே வாழ்த்தினையும் அந்த பேனரில் குறிப்பிட்டுள்ளார். அதே போல, தனது நண்பர்கள் உதவியுடன் இந்த பேனர்களை பல பகுதிகளில் வைத்ததாகவும் ஜிஷ்ணு தெரிவித்துள்ளார். பலரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் அல்லது முதல் சில இடங்களை பிடிக்கும் நபர்களுக்கு பேனர்கள் இருப்பதை பார்த்திருப்போம்.

Kerala tenth student places banner for himself after passing public ex

ஆனால், இந்த மாணவர் தேர்ச்சி பெற்றதையே மிகப்பெரிய ஒரு வெற்றியாக கருதி, அளவு கடந்த தன்னம்பிக்கையுடன் இந்த பேனரை வைத்துள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே போல, தேர்ச்சி அடைந்ததற்காக ஜிஷ்ணுவை அவரது நண்பர்கள் தோள்களில் தூக்கி வைத்து ஆர்ப்பரிக்கும் வீடியோவும் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மேலும், பதினொன்றாம் வகுப்பில் தான் தேர்ச்சி அடைந்தால், அதற்காக பேனர் வைப்பதற்கு திட்டம் ஒன்றை போட்டு வைத்துள்ளதாகவும் ஜிஷ்ணு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | சீறி ஓடிய காட்டாற்று வெள்ளம்.. சிக்கியவர்களை நீரில் குதித்து காப்பாற்றி ஹீரோவான வாலிபர்.. இதயம் வென்ற வீடியோ

KERALA, KERALA TENTH STUDENT PLACES BANNER, PUBLIC EXAM, PASSING PUBLIC EXAM

மற்ற செய்திகள்