காருக்குள் ஏறிய பாம்பு.. "பல நாள் தேடியும் கிடைக்காம கடைசி'ல"..உச்சகட்ட பதற்றத்தில் வாலிபர்!!.. "இவ்ளோ நாள் இதுகூடயா Travel பண்ணோம்"
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம், கோட்டயம் பகுதியை அடுத்த ஆர்பூக்கரை என்னும் இடத்தை சேர்ந்தவர் சுஜித். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன், மலப்புரம் பகுதிக்கு தனது காரில் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் வழிக்கடவு சோதனை சாவடி அருகே கார் நின்று கொண்டிருந்த போது அதற்குள் பாம்பு ஒன்று ஏறி சென்றதை சுஜித் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆனால், காருக்குள் பாம்பை முழுவதும் தேடி பார்த்த பிறகும், சுஜித்தால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
இதன் பின்னர், பாம்பை வெளியே எடுக்கவும் வனத்துறை அதிகாரிகளை சுஜித் அழைத்துள்ளார். அது இன்ஜின் பக்கம் நுழைந்து கார் பேட்டரிக்கு அருகில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் பாம்பை மீட்க அதிகாரிகள் வந்ததால் பாம்பு பேட்டரிக்கு அடியில் சிக்கியதன் காரணமாக அதை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். இதன் பின்னர் காரை சற்று நேரம் ஸ்டார்ட் செய்து வைத்து இன்ஜின் அதிகம் வெப்பம் அடைந்த பின்னர், பாம்பு தானாக வெளியேறும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அப்படி செய்த பின்னும் பாம்பு வெளியே வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் பின்னர் பாம்பு வெளியே வருவதற்காக காரை அதே இடத்தில் இரண்டு நாட்கள் நிறுத்தி உள்ளார்கள். பிறகு பாம்பு சென்றதாக கருதி, இரண்டு நாட்களுக்கு பிறகு சுஜித் காரை ஒரு சர்விஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றுள்ளார். அங்கு வைத்து காரை சரி பார்க்க காரை தூக்கிப் போதும் பாம்பு தென்படவில்லை. இதன் பின்னர் வழக்கம் போல தனது பயணத்தை மேற்கொண்ட சுஜித், காரை எடுத்துக் கொண்டு சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த ஊருக்கும் திரும்பி உள்ளார்.
அப்படி ஒரு சூழ்நிலையில், அடுத்த அதிர்ச்சி சுஜித்திற்கு காத்திருந்தது. பாம்பு காரில் புகுந்த விஷயத்தை அவர் மறந்திருந்த வேளையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக காருக்குள் தொங்கிக் கொண்டிருந்த பாம்பின் தோலை கண்ட சுஜித்தும் அவரது குடும்பத்தினரும் கடும் அச்சம் அடைந்தனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் நடத்திய சோதனையில் மீண்டும் அந்த பாம்பு சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே சுஜித் வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள அவரது நண்பர் வீட்டிலிருந்து பத்தரை நீளம் கொண்ட ராஜ நாகம் ஒன்றை வனத்துறை அதிகாரி மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த பாம்பை சுஜித்திடம் காட்டிய போது, காரில் ஏறிய பாம்பு தான் என்பதை உறுதிப்படுத்தினார்.
ஒரே காருக்குள் இத்தனை நாட்கள் அந்த பாம்பு இருந்ததுடன் மட்டுமில்லாமல், அதனுடன் சுமார் 200 கி .மீக்கு மேல் வாலிபர் பயணம் செய்த சம்பவமும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்